ரத்தசோகையைத் தடுக்க இரண்டு வழிகள்!

மூன்று வயதுக்கு உட்பட்ட இந்தியக் குழந்தைகளில் 75 சதவிகிதத்தினர்; இந்தியக் கர்ப்பிணிகளில் மூவரில் இருவர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை. எப்படி ஏற்படுகிறது ரத்தசோகை? ரத்தசோகையை எதிர்கொள்வது எப்படி? இது குறித்து சென்னை அரசுப் பொது மருத்துவமனையின் குருதியியல் துறைத் தலைவர் சி.மார்க்ரெட் நம்மிடம் பேசினார். 

''ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை இருக்க வேண்டிய அளவைவிடக்  குறையும்போது ரத்தசோகை குறைபாடு ஏற்படுகிறது. உடலின் பல உறுப்புகளுக்கும் ஆக்சிஜனைச் சுமந்து செல்வது இந்தச் சிவப்பு அணுக்கள்தான். அவற்றில் இருக்கும் ஹீமோகுளோபின்கள்தான் இந்தப் பணியைச் செய்கின்றன. எனவே, ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்தால், அது உடலின் பல உறுப்புகளின் செயல்பாட்டையும் பாதிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்