உயர் ரத்த அழுத்தம்

அறிகுறிகளை அறிவோம்!

யர் ரத்த அழுத்தம் எந்தவித அறிகுறியும் இன்றி அதிகரிக்கும். காய்ச்சல்,                 அறுவைசிகிச்சை என்று மருத்துவமனைக்கு வரும்போதுதான் 99 சதவிகித   உயர்             ரத்தஅழுத்த பிரச்னை கண்டறியப்படுகிறது. 30 வயதைக் கடந்துவிட்டால், குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையேனும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

 அறிகுறிகள்

 கடுமையான தலைவலி

 மயக்கம்

பார்வைக் குறைபாடு

 நெஞ்சு வலி

 சுவாசித்தலில் பிரச்னை

 சீரற்ற இதயத் துடிப்பு

 மூக்கில் ரத்தம் வருதல் 

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க...

 சிகரெட் - ஆல்கஹால் தவிர்க்க வேண்டும்

  உடல் எடை, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்

துடிப்பான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற வேண்டும்

தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்

உணவில் உப்பு அளவைக் குறைக்க வேண்டும்

பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட

   உணவுகளைத் தவிர்க்க வேண்டும்

மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்

 ஒரு நாளைக்குக் குறைந்தது எட்டு மணி நேரம்

   தூங்கி எழுந்திருக்க வேண்டும்.

காய்கறி, பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

 கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போதுமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்

                                                                                     

சோடியம் அளவு அதிகரிக்கும்போது, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பொட்டாசியம் அளவு அதிகரிக்கும்போது, கட்டுக்குள் வரும். பொட்டாசியம், காய்கறிகளில் அதிகமாக உள்ளது. ஆனால், சமைக்கும்போது பொட்டாசியம் வெளியேறிவிடுகிறது. பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick