அக்கம் பக்கம்

கருவிலேயே இதய அறுவை சிகிச்சை!

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் 25 வயதான சிரிஷா. கர்ப்பிணியான இவர், 5-வது மாதத்தில் செய்யப்படும் பரிசோதனைக்கு சென்றார். பரிசோதனையில் குழந்தையின் இதயத்தில் மகாதமனியில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்தின் வலது ஓரப்பகுதியில் ரத்த ஓட்டம் குறைந்தும் வளர்ச்சி குன்றியும் காணப்பட்டது. ‘குழந்தை பிறந்த பிறகு இந்தக் குறைபாட்டை சரிசெய்ய முடியாது. ஆனால், கருவில் இருக்கும்போதே செய்யலாம்’ என்று டாக்டர்கள் ஆலோசனை அளித்தனர். உடனடியாக அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாயின் வயிற்றின் வழியாக, கருவில் உள்ள குழந்தையின் இதயத்துக்குள், மெல்லிய ஒயர் போன்ற கருவி செலுத்தப்பட்டு, ரத்தக் குழாயில் பலூனைச் செலுத்தி அடைப்பை சரிசெய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்