Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்போ... “ஒல்லி பெல்லி” இப்போ... வெயிட் எப்படி?

பு.விவேக் ஆனந்த், படங்கள்: ர.சதானந்த்

''ஜஸ்ட் ஏழெட்டு கிலோ குறைத்தால் போதும்.  உடலை ஃபிட்டாக் கொண்டுவந்திடலாம். ஆனா, எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும், டயட்ல இருந்தாலும் என் எடை மட்டும் குறைய மாட்டேங்குது' இப்படிப் புலம்புபவர்கள் மத்தியில், விஜய் டி.வி. நடத்திய 'ஒல்லிபெல்லி’ ரியாலிட்டி ஷோ, செம ஹிட். இந்த ஷோவில் கலந்துகொண்டு 100 நாட்களில் 30, 40 கிலோ எடை குறைத்து அசர வைத்தனர் கோமதி, சவுந்தர்யா, செந்தில், நிகிலேஷ், ஸ்ரீகாந்த், அகிலா.  இவர்கள் இன்றும் அதே எடையுடன்தான் இருக்கிறார்களா? டிவி ஷோ முடிந்து 100 நாட்கள் கழிந்த நிலையில், இன்றைக்கு அவர்கள் ஒவ்வொருவரின் 'வெயிட்’ ஸ்டேட்டஸ் என்ன?  

சௌந்தர்யா

'ஒல்லி பெல்லி ஷோ முடிஞ்சதுக்கு அப்புறம் ஏழு கிலோ ஏறிட்டேன். பிறகு, ஜிம் போய் டெய்லி ஒரு மணி நேரம் எக்சர்ஸைஸ் செய்தும் அதில் நாலு கிலோதான் குறைக்க முடிஞ்சது. இப்பவும் என் உயரத்தை விட அதிக வெயிட்லதான் இருக்கேன். டயட், எக்சர்ஸைஸ்னு தீவிரமாக இருக்கேன். சீக்கிரமா வெயிட் குறைச்சா, அதே வேகத்துல ஏறிடுங்கிறதால கேர்ஃபுல்லா இருக்கணும். எல்லாரும் எடை குறைக்க ஒண்ணு எக்சர்சைஸ் பண்றாங்க, இல்லைனா டயட்ல இருக்காங்க. ஆனா இது ரெண்டுமே சேர்த்து ஒரே நேரத்தில் ஃபாலோ பண்ணினால் வெயிட் குறையும் என்பது என் அனுபவம்!'

செந்தில்

'ஷோவுக்கு வரும்போது 10 கிலோவாவது குறைச்சாலே போதும்னு நினைச்சேன். மிகக் கடுமையான டயட், உடற்பயிற்சியா இருந்தாலும், எல்லாம் செய்தேன். அரிசி சாதம், பிரியாணி, சாட் மசாலா என எனக்குப் பிடிச்ச எதுவுமே அப்ப சாப்பிடலை. ஆனா அந்த நிகழ்ச்சி முடிஞ்சதும், 100 நாளா என்னென்ன சாப்பிடாம இருந்தேனோ, அத்தனையையும் வெளுத்துக்கட்டினேன். அதனால 12 கிலோவுக்கும் அதிகமா வெயிட் கூடிட்டேன். மறுபடியும் டயட். டெய்லி ஜிம்மில் 2 மணிநேர உடற்பயிற்சினு ஓரளவு வெயிட்டைக் குறைச்சிட்டேன்.  இப்போ 78 கிலோ இருக்கேன். இன்னும் எட்டு கிலோ குறைக்கணும்!''

கோமதி

'ஸ்கூல், காலேஜ் நாட்களில் நான் பேஸ்கட் பால் , ஃபுட்பால் பிளேயர். என் உடம்பு செம ஃபிட்டா இருக்கும். ஆனா, கல்யாணம், குழந்தைகள்னு வந்தப்புறம் 113 கிலோ வரைக்கும் ஏறிட்டேன். 100 நாளில் 43 கிலோ குறைச்சேன். எனது உழைப்புக்கு டைட்டில் வின்னர் பட்டம் கிடைச்சது. இப்பவும் என் டயட்ல நான் உறுதியா இருக்கேன். சைனஸ் பிராப்ளத்துக்கு, மாத்திரை எடுக்கிறதால, சைட் எபக்ட்ல வெயிட் ஏறிட்டே இருக்குது. ஆனா எக்ஸர்சைஸ் பண்ணி நான் கன்ட்ரோல் பண்றேன். இப்போ  75 கிலோ இருக்கேன். எடையை இன்னும் குறைக்கணும்கிற ஆசையைவிட, இப்ப உள்ள எடையை மெயின்டெயின் பண்ணாலே போதும்னு இருக்கு.'

ஸ்ரீகாந்த்

'எனக்கு ஐ.டி கம்பெனியில் வேலை. என்கூட வேலை செய்ற எல்லோருமே கொஞ்சம் வெயிட்டாத்தான் இருப்பாங்க. ஆனா, நான் அதையெல்லாம்விட ஓவர் வெயிட்ல  அபாய கட்டத்தில் இருந்தேன். 100 நாளில் எனது உடலில் மூன்றில் ஒரு பங்கு வெயிட்டைக் குறைச்சேன்.  ஆனா, அதுக்கப்புறம் மறுபடியும் அதிகமான ஆபீஸ் வேலையினால, எக்சர்ஸைஸ் செய்ய முடியலை. பெரிய அளவுல அதிகரிக்கலை.  இப்ப 105 கிலோ இருக்கேன். இன்னும் 30 கிலோ வரைக்கும் குறைக்கணும். குறைக்க முடியும்னு நம்பிக்கை இருக்கு.'

நிகிலேஷ்

'இன்ஜினீயரிங் படிச்சிட்டு இருந்தப்ப என் குண்டான உடம்பைப் பார்த்துட்டு, ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் பயங்கரமா கலாய்ப்பாங்க.  வெயிட்டைக் குறைக்கணும்னு ஆசை இருந்தாலும் என்னால முடியலை.  ஷோவில் 42 கிலோ  குறைச்சேன். எங்க பயிற்சி

யாளர் 'இந்த ஷோ முடிவில் அதிக எடை குறைக்கிறது பெரிய விஷயம் இல்லை.  ஒரு வருஷம் கழிச்சு, ஷோவுக்காகக் குறைச்ச எடையைவிட ஒரு கிலோவாவது குறைவா இருக்கணும். அவங்கதான் 'நிஜமாவே வின்னர்’னு சொன்னார். அதனால், ஷோ முடிஞ்ச பிறகும்கூட நான் டயட் பழக்கத்தைக் கைவிடலை.  இப்ப நான் 79 கிலோ. நல்லா ஒல்லியாகிட்டேன்.இன்னும் உடலை வலுவாக்கணும். என் டார்கெட் அதுதான்.'

அகிலா

'7 மாசத்துக்கு முன்னாடி நான் 99 கிலோ எடை இருந்தேன். செம குண்டுனு நானே சொன்னாகூட இப்போ யாரும் நம்ப மாட்டேங்கறாங்க. 100 நாளிலேயே என் உயரத்துக்கு ஏற்ற எடைக்கு வந்துட்டேன். இப்ப ஷோவில் இருந்த மாதிரி எப்பவும் டயட் இருக்கிறது ரொம்பக் கஷ்டம். தீபாவளியின்போது, வீட்டுல செஞ்ச பலகாரம் எல்லாத்தையும் நல்லா சாப்பிட்டேன். ஆனா, இப்படி சாப்பிடுவதால் ஏறும் கலோரிகளை அடுத்த நாள் உடற்பயிற்சியில் எரிச்சுடுவேன். இப்போ 69 கிலோ இருக்கேன். இனிமே நான் எப்பவும் குண்டாக மாட்டேன்!'

100 நாள் மேஜிக் என்ன?

ரியாலிட்டி ஷோ பயிற்சியாளர் கண்ணன் புகழேந்தி:

ஷோ நிகழ்ந்த குறிப்பிட்ட 100 நாட்களும், போட்டியாளர்களுக்கு முறையான உணவு, உடற்பயிற்சி, உறக்கம் மூன்றிலும் கவனம் செலுத்தினோம். காலையில் நடைப்பயிற்சி, ஜாக்கிங் செய்யவைத்தோம். பிறகு காலை உணவு. சிறிது ஓய்வுக்குப் பிறகு மீண்டும் ஜிம்மில் உடற்பயிற்சி, மதிய உணவு, சிறிது ஓய்வு. மீண்டும் உடற்பயிற்சி, பிறகு இரவுத் தூக்கம். அதோடு ஜூம்பா நடனம், யோகா, ஏரோபிக்ஸ் மற்றும் தற்காப்பு

 

கலைகளையும் சொல்லிக்கொடுத்தோம்.மிக அதிக உடல் எடை கொண்டவர்கள், கொஞ்சம் உடற்பயிற்சி செய்தாலே எடை குறைய ஆரம்பித்துவிடும். உயரத்துக்கு ஏற்ற எடையைவிட பத்து கிலோ மட்டும் அதிகம் இருப்பவர்கள் மிக அதிகளவில் உடற்பயிற்சி மற்றும் கடுமையாக டயட் கடைப்பிடித்தால் மட்டுமே எடையைக் குறைக்கமுடியும். சாதாரணமாக  தங்களது தினசரி வேலைகளைச் செய்துகொண்டே இவ்வளவு எடை குறைக்க முடியாது.எடை குறைக்க விரும்புபவர்கள் சாப்பிடாமல் இருக்கக் கூடாது.சாப்பாட்டில் கலோரி அளவைக் குறைத்து,உடற்பயிற்சியின் மூலம் அதிக கலோரிகளை எரிக்க வேண்டும்.இதுதான் உடல் எடை குறைய மிகச் சிறந்த வழி!'

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஃபிட்னெஸ்
தன்னம்பிக்கையே அழகு! அகிலா கிஷோர்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close