நலம், நலம் அறிய ஆவல்!

'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ பிரச்னைக்காக மருத்துவமனைக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்திருக்கிறது. காரணம், நீண்ட நேரம் கம்ப்யூட்டர், மொபைல், டேப்லட் போன்றவற்றில் நேரம் செலவழிப்பதுதான்.  இதனால், ஒரு கட்டத்தில் கண்கள் மிக மோசமானப் பாதிப்புக்கு உள்ளாகும்.

பொதுவாக ஒரு நிமிடத்துக்கு 30 முறை கண் சிமிட்டல் நிகழும்். ஆனால், தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பார்க்கும்போது கண் சிமிட்டுதல் தடைப்படுகிறது. நிமிடத்துக்கு ஐந்து முறை கண் சிமிட்டுவதே அரிதாகிவிடும். இதனால், கண்களில் ஈரப்பதம் குறைந்து கண் எரிச்சல், மங்கலான பார்வை, தலைவலி, கழுத்துவலி போன்றவை ஏற்படலாம். இதை 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ என்கிறோம். இன்று நிறையப் பேருக்கு இந்தப் பிரச்னை வருகிறது' என்கிறார் கண்நல மருத்துவர் எஸ்.கல்பனா.

'நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20: 20: 20 என்ற விதியைப் பின்பற்ற வேண்டும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 நொடிகள் கண்களைச் சிமிட்டி, 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளைப் பார்க்க வேண்டும்.

கம்ப்யூட்டர் மானிட்டர், பார்வைக்கு 45 இண்ச் அளவு உயரம் குறைவாக வைக்க வேண்டும். பாதங்கள் தரையில் ஊன்றியிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் மானிட்டருக்கு எதிராகவோ, திரையில் வெளிச்சம் படும்படியோ மின் விளக்கு இருக்கக் கூடாது. தலைக்கு மேல் மின் விளக்கு இருக்க வேண்டும். முடிந்தவரை மொபைலில் விளையாடுவது, படிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இதைச் செய்தால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்' என்கிற டாக்டர்,

'குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு பற்றி கூறுகையில், 'குழந்தைகளை 34 வயதிலேயே கண் மருத்துவரிடம் அழைத்துவந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும். குழந்தை அடிக்கடி கண்களைக் கசக்கிக்கொண்டிருந்தாலோ, புத்தகங்களிலும், கரும்பலகையிலும் எழுதியுள்ளதைப் படிப்பதில்  பிரச்னை இருந்தாலோ, உடனடியாகக் கண் மருத்துவரை அணுக வேண்டும். சில குழந்தைகளுக்கு கண்களில் உள்ள பவர் வேறுபாடு காரணமாக 'சோம்பேறிக் கண்’ என்ற பிரச்னை ஏற்படலாம். நல்ல பார்வை உள்ள கண்ணில் இருந்து வரும் தகவல்கள் மட்டும் மூளை எடுத்துக்கொண்டு, மற்றொரு கண்ணைப் புறக்கணித்துவிடும். ஒரு கட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட கண்ணில் பார்வை முற்றிலுமாகப் போய்விடும் அபாயம் இருக்கிறது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிசெய்ய முடியும். அதேபோல, மாறுகண் என்றால் அதிர்ஷ்டம் என்ற தவறான நம்பிக்கை உள்ளது. மாறுகண் பிரச்னையால் குழந்தைகளின் பார்வைத் திறன் பாதிக்கப்படலாம். எட்டு வயதுக்குள் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிப்பதன் மூலம் மாறுகண் பிரச்னையை சரிசெய்யலாம்' என்கிறார் டாக்டர் கல்பனா.

அன்பு வாசகர்களே, டிசம்பர் 1 முதல் 15ம் தேதி வரை தினமும் 044  66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால்,கண்களில் ஏற்படக்கூடிய நோய்கள், அதற்கான சிகிச்சைகள், ஆரோக்கியமான பார்வைத் திறன் பெறும் வழிகள் போன்றவை பற்றி விரிவாகப் பேசுகிறார். கண் மருத்துவர் எஸ்.கல்பனா

  மெட்ராஸ் ஐக்கு என்ன சிகிச்சை?

  கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் என்றால் என்ன?

  கம்ப்யூட்டர் விஷன் பிரச்னையைத் தவிர்க்க என்ன வழி?

  கண் நீர் அழுத்த நோய் ஏன் ஏற்படுகிறது? சிகிச்சை என்ன?

  கண்ணில் பூச்சி பறப்பது ஏன்?

  தலைவலி வந்தால் முதலில் கண் பரிசோதனை செய்யச் சொல்கிறார்களே, அது ஏன்?

  சர்க்கரை நோய் எப்படி கண் நலனைப் பாதிக்கிறது?

  மாறுகண் பிரச்னைக்கு என்ன தீர்வு?

  கண் தானம் செய்வது எப்படி?

  கண்ணில் ஏற்படும் காயங்கள், அவற்றுக்கான சிகிச்சை முறைகள் என்ன?

  கண்ணில் புற்றுநோய் ஏற்படுமா?

  கண் நலனுக்குச் செய்ய வேண்டியவை என்ன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick