புன்னகை என்ன விலை?

டாக்டர் ரவிவர்மா, பல் மருத்துவர், படங்கள்: ஆர்.வருண் பிரசாத்

அழகுக்கு அழகு சேர்ப்பது புன்னகை. பற்கள் பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதற்காக இன்று பலரும் அழகு சிகிச்சைகளில் ஆர்வம் காட்டுகின்றனர். இது தேவையா, அவசியமா, பாதுகாப்பானதா என்கிற கேள்விகள் முதலில் முக்கியம். ஃபேஷியல், ப்ளீச்சிங், ஸ்பா வரிசையில் இப்போது புதிதாக... டீத் ஒயிட்டனிங்! பற்கள் கொஞ்சம் மஞ்சளாக இருந்தால் கூட, உடனே பல் மருத்துவமனைகளிலோ, அழகு நிலையங்களிலோ வரிசையில் நிற்கிறார்கள். இப்படி செயற்கையாக பற்களை வெள்ளையடிப்பது சரியா? இது ஆரோக்கியமானதா?

பொதுவாக பற்கள் அனைவருக்கும் வெள்ளையாக இருக்காது. முத்துபோன்ற வெண்மை, அரை வெண்மை, வெளிர் மஞ்சள் (Pearl white, half white, pale yellow) என நிறங்கள் மாறுபடும். பல் முளைக்கும்போது ஏ1 ஷேடில் இருக்கும். வயதாகும்போது அது ஏ3 ஷேட் வரை குறையும். அதாவது, எனாமல் என்ற பல்லின் மேல்பகுதி நீங்கி, அடுத்த பகுதியான டென்டின் (dentin) தெரியத் தொடங்குவதே பற்களின் நிறமாற்றத்துக்குக்் காரணம். நரைமுடி வருவது எப்படி இயல்பான விஷயமோ... அதுபோல பற்கள் நிறம் குறைவதும், கொஞ்சம் மஞ்சளாக இருப்பதும் இயல்பானதே. இது நோயும் அல்ல. நோயின் அறிகுறியும் அல்ல.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்