வீட்டு சாப்பாடு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நான் அஞ்சல் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த காலம். என்னோடு கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற நண்பர் பணியாற்றினார். தாமிரபரணி ஆற்றுக்கு இந்தப் பக்கம் அம்பாசமுத்திரம். அந்தப்பக்கம் கல்லிடைக்குறிச்சி. தொழிற்சங்கப் பணிகளால் இரவு தாமதமாகும்போது, ஊர் திரும்ப பஸ் இல்லாத நிலையில், அவர் வீட்டில்தான் தங்குவேன். அப்போதெல்லாம் எனக்காக அவருடைய அம்மா ஒரு சட்டி நிறைய பழைய சாதம் தண்ணீர் விட்டு எடுத்துவைத்திருப்பார். எத்தனையோ வீடுகளில் நான் பழையசோறு சாப்பிட்டிருந்தாலும், அவர்கள் வீட்டுப் பழையது மாதிரி பக்குவம் அமைந்தது இல்லை. `பழைய சோத்துக்கு என்னய்யா பக்குவம்?’ என்று சாதாரணமாக எண்ணிவிடக் கூடாது.

எங்கள் கிராம வீடுகளில் புளிச்சதண்ணி என்று ஒன்றைத் தாய்மார்கள் தயாரித்து, ஒரு மண்பானையில் வைத்துப் பாதுகாத்து வருவார்கள். சோற்றுடன் கலந்த நீர் அது. நாள்பட நாள்பட அதில் புளிப்பேறிக்கொண்டிருக்கும். சாப்பிட்டதுபோக, மீதமுள்ள சோற்றில் இந்தப் புளிச்ச தண்ணி ரெண்டு டம்ளர் அளவுக்கு ஊற்றி உப்பிட்டு, மேலும் சாதா தண்ணீர் சேர்த்து மூடிவைத்துவிட வேண்டும். ஏழெட்டு மணி நேரம் கழித்து, அதைத் திறந்தாலே ஒரு கிறக்கும் வாசனையோடு பழையது (பழையமுது திரிந்து பழையது என்றாகியிருக்க வேண்டும்) தயாராக இருக்கும். அந்தத் தண்ணீர்தான் பின்னர் நீராகாரம் என நாகரிகப் பெயர் பெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்