அலைபாயுதே! - 5

ப்ரியா தம்பி

சுந்தருக்கு அரசியல் ஆர்வம் அதிகம். குட்டிச்சுவர், டீக்கடை, செல்ஃபோன் என எந்நேரமும் நண்பர்களிடம்  அரசியல் கதைதான்.  ‘‘அடுத்த எலக்‌ஷன்ல நிக்கிறோம், எம்.எல்.ஏ ஆகுறோம், ஊரையே மாத்தறோம். நம்மளால முடியலைன்னா வேற யாரால முடியும்’’ என உற்சாகம் பீறிட பேசிக்கொண்டிருப்பார். அரசியலில் சேரும் அளவுக்குப் பணம் உள்ளவர் என்பதால், நண்பர்களும் சுந்தரை உற்சாகப்படுத்துவார்கள்.
 
எல்லாம் மூன்று மாதங்கள்தான். ‘‘அரசியல்ல என்னப்பா இருக்கு. என்னால எல்லாம் அதுல இறங்க முடியாது. அரசியல் மட்டுமில்ல, எதுவுமே எனக்கு வராது.’’ எனப் புலம்புவார். முந்தைய மனநிலைக்கு நேர் எதிராக, எந்த நேரமும் சோர்வாகவும் இயலாமையோடும் புலம்பிக்கொண்டிருப்பார். சில மாதங்களுக்குப் பிறகு மறுபடியும், ‘‘நம்மளால முடியலைன்னா வேற யார் செய்வாங்க’’ எனப் பழையபடி ஆரம்பிப்பார்.

சுந்தரின் இந்தப் பிரச்னையை ‘பைபோலார் டிஸ்ஆர்டர்’ என்கிறது மனநல மருத்துவம். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள், குறிப்பிட்ட காலம் வரை சந்தோஷமாகவும், பின்னர் குறிப்பிட்ட காலம் வரை துக்கத்துடனும் இருப்பார்கள். ஒரு மனநிலையில் இருந்து இன்னொரு மனநிலைக்கு மாறும் கால இடைவெளி என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலருக்கு, ஏழு வாரங்களில் இருந்து, ஆறு மாதங்கள் வரைகூட ஒரே மனநிலை நீடிக்கும். சிலருக்குக் காலையில் ஒரு மனநிலை, மதியம் ஒரு மனநிலை என, ஒரே நாளில்கூட மாறி மாறி வெளிப்படும். இவர்கள் உற்சாகமாக இருக்கும் காலத்தை ‘மேனிக்’ காலகட்டம் என்றும் சோர்வாக இருக்கும் காலத்தை ‘டிப்ரஷன்’ காலகட்டம் என்றும் சொல்கிறது மனநல மருத்துவம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்