ஹார்மோன் கெமிஸ்ட்ரி - 2

சோமடோட்ரோபின் ஹார்மோன்

ட்டு வயது சிந்து படிப்பில் படுசுட்டி. ஒரு நாள் தன் அம்மாவிடம் “எப்பம்மா நான் உங்களை மாதிரி பெரிசா ஆவேன்?” எனக் கேட்க, “இன்னும் கொஞ்சம் வயசானா, நல்லா வளர்ந்துடுவ கண்ணு” என்றார். “வயசு ஆக ஆக உயரம் அதிகமாகுமாம்மா?” சிந்துவின் அடுத்த கேள்வி இது. “அப்படி இல்லைம்மா... இன்னும்  10 வருஷம் வரைக்கும் நீ நல்லா உயரமா வளருவ. அதுக்கு அப்புறம் வளர்ச்சி அவ்ளோதான்” என்றார். “ஏன் அதுக்கப்பறம் வளர முடியாதா?”  என்று விடாமல் கேள்வி கேட்டுத் துளைக்க, சிந்து அம்மாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இதற்கான பதில் உங்களுக்கு தெரியுமா?

 சிந்துவின் கேள்விக்குப் பதில் சொல்ல,  சோமடோட்ரோபின்    (Somatotropin) என்கிற வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone) பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
குழந்தை பிறக்கும் போதே, உடலில் வளர்ச்சி ஹார்மோன் சுரக்க ஆரம்பித்து, வாழ்நாள் முழுக்க உடலில் சுரந்துகொண்டே இருக்கும். இந்த ஹார்மோன், குழந்தை பிறந்தது முதல் 18 மாதங்கள் வரை வேகமாகவும், பருவ வயதில் மிக வேகமாகவும், அதிக அளவும் சுரக்கும். இதனால் 18  வருடங்கள் வரை உயரமான வளர்ச்சி இருக்கும். அதில், ஆண்கள் 16-18 வயது வரையிலும், பெண் குழந்தைகள் பூப்படைந்த பிறகு, இரண்டு, மூன்று வருடங்கள் வரையிலும் நன்றாக வளருவார்கள். குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர், பெரும்பாலும் வளர்ச்சி நின்றுவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்