உயிர் காக்கும் பயணத்தில் ஒரு நாள் !

யிர் காக்கும் பயணத்தின் ஓர் அங்கமாக கடந்த மார்ச் 17-ம் தேதி, தமிழகத்தின் இரண்டு இடங்களில் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தான முகாம்களை நடத்தியது டாக்டர் விகடன். தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக ரத்த தான முகாமை அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பாலச்சந்திரனும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி டீன் பி.ஜி.சங்கர நாராயணனும், பெரம்பலூரில் நடந்த முகாமை தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்விக் குழுமத்தின் தாளாளர் வரதராஜனும் தொடங்கிவைத்தனர்.

முகாமில் மொத்தம் 307 பேரிடம் ரத்ததானம் பெறப்பட்டது. 250 பேர் உடல் உறுப்பு தானத்துக்கும், 200-க்கும் மேற்பட்டவர்கள் கண் தானத்துக்கும் உறுதிமொழிப்  படிவங்களைப் பூர்த்தி செய்துதந்தனர்.
தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில், ரத்த தானம் செய்ய, 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் வந்தாலும், எடை குறைவு, ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களால் சிலரால் ரத்த தானம் செய்ய முடியாத நிலை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்