ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“குழந்தைகளுக்கு நூடுல்ஸ், சிப்ஸ் என ஜங்க் ஃபுட் கொடுக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கிறோம். ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால், உடல் பருமன், அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால், பல பெற்றோர்கள் நூடுல்ஸ் கொடுக்கக் கூடாது என்றால் வேறு என்ன கொடுப்பது என்று கேட்கின்றனர். நம்முடைய பாரம்பரிய உணவுகளே ஏராளமாக உள்ளன. இட்லியை விதவிதமாக செய்துகொடுத்தாலே, குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். காய்கறி சாலட், பழங்களால் ஆன மில்க் ஷேக், சாலட் என நிறைய விஷயங்கள் உள்ளன. இவற்றைச் சாப்பிடும்போது, இரண்டு மூன்று மணி நேரத்துக்கு பசி எடுக்காது. வைட்டமின்கள், தாதுஉப்புகள் நிறைந்தது என்பதால், குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைத்துவிடும்” என்கிறார் கிளினிக்கல் நியூட்ரிஷியனிஸ்ட் மதி வெங்கட்ராமன்.

“இன்று பலருக்கும் உள்ள சந்தேகம், சமையலில் எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்? எவ்வளவு பயன்படுத்த வேண்டும்? என்பதுதான். எண்ணெய் அவசியம்தான். ஆனால் மிகக் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணெயை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு முறை சூரிய காந்தி விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் என்றால், அடுத்த மூன்று மாதங்களுக்கு எள் போன்ற எண்ணெய் வித்துக்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். அடுத்த மூன்று மாதங்கள் தானியங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், சோளம் எண்ணெய் என்று மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வோர் எண்ணெயிலும் ஒரு வகையான ஊட்டச்சத்து உள்ளது. எண்ணெயை மாற்றிக்கொண்டே இருக்கும்போது அதன் பயன் முழுமையாகக் கிடைக்கும்” என்கிறச்ர் ஶ்ரீமதி வெங்கட்ராமன்.

சரியான நேரத்துக்கு சாப்பிடுவதன் அவசியம் என்ன?

காலை உணவை ஏன் தவிர்க்கக் கூடாது?

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

சரிவிகித உணவு என்றால் என்ன?

உணவில் உப்பு எவ்வளவு சேர்க்க வேண்டும்?

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

- பா.பிரவீன் குமார்

அன்பு வாசகர்களே, ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை தினமும், 044-66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், உணவு உட்கொள்ளுதல், உடல் எடைக் குறைக்க உதவும் டயட், சரிவிகித சத்தான உணவு என்றால் என்ன என்பது பற்றி விரிவாகப் பேசுகிறார் கிளினிக்கல் நியூட்ரீஷியனிஸ்ட் ஶ்ரீமதி வெங்கட்ராமன்.


“நம் உடலில் உள்ள கார்பன் டை ஆக்சைடை அகற்றி, காற்றில் ஆக்சிஜனைப் பிரித்து ரத்தத்தில் கலக்கும் பணியை செய்கிறது நுரையீரல். வெளிப்புற சுற்றுச்சூழலுடன் அதிகம் தொடர்புகொள்ளும் உள்உறுப்பு நுரையீரல். இதனால், சுற்றுச்சூழல் காரணிகள் மிகப்பெரிய அளவில் நுரையீரலைப் பாதிக்கின்றன. நுரையீரலை பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள், பூஞ்சை, மற்றும் வாகனம், சிகரெட் புகை, தொழிற்சாலைகள் வெளியிடும் மாசு பாதிக்கிறது. கிருமிகளில், நுரையீரலை பாதிப்பதில் முக்கியமானது காசநோய். இதை பாக்டீரியா கிருமி ஏற்படுத்துகிறது. வைரஸ் கிருமியால் நிமோனியா போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. அவ்வப்போது ஸ்வைன் ஃபுளு, பறவைக் காய்ச்சல் என்று பல்வேறு கிருமித் தொற்று நுரையீரலைத் தாக்குகின்றன” என்கிறார் நுரையீரல் - இதய மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் கோவினி பாலசுப்பிரமணி.

நுரையீரலைப் பாதுகாக்க செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி கூறுகையில், “காற்றில் உள்ள கிருமிகள் எளிதில் நுரையீரலைத் தாக்கும் என்பதால், அசுத்தமான இடங்கள், நோய்க் கிருமி தொற்று ஏற்படுத்தும் இடங்களுக்கு பயணிக்கும்போது மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முகத்தில் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். மாஸ்க் இல்லாதவர்கள் குறைந்தது கைக்குட்டையையாவது வைத்து மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். வீட்டைச் சுற்றிலும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நிறைய மரங்கள் செடிகள் வளர்க்கலாம். ஒவ்வொரு மரமும், செடியும் நமக்குத் தேவையான ஆக்சிஜனை அளிக்கும். முடிந்தவரை சமுதாயக் காடுகளை அரசாங்கங்கள் ஏற்படுத்தும்போது, கார்பன் டை ஆக்சைடு அளவு குறைந்து ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். போக்குவரத்து நெரிசலான இடங்களில் பயணிப்பவர்களும் மாஸ்க் அணிந்து செல்வதன் மூலம் சி.ஓ.பி.டி எனப்படும் நாட்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்” என்கிறார் டாக்டர்.

நுரையீரலின் முக்கியத்துவம் என்ன?

சிகரெட், சுற்றுச்சூழல் மாசு எப்படி நுரையீரலைப் பாதிக்கிறது?

நோய்க் கிருமிகளிடம் இருந்து நுரையீரலைப் பாதுகாக்க செய்ய வேண்டியவை என்ன?

நுரையீரலில் ஏற்படும் காசநோய்க்கு என்ன சிகிச்சை?

ஆஸ்துமா ஏன் ஏற்படுகிறது? அதற்கு என்ன சிகிச்சை?

 

அன்பு வாசகர்களே, ஆகஸ்ட் 8 முதல் 15-ம் தேதி வரை தினமும், 044-66802904என்ற எண்ணுக்கு போன் செய்தால், நுரையீரலின் பயன்பாடு, பாதிக்கும் விஷயங்கள், பாதுகாப்பு வழிமுறைகள், சிகிச்சை முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் நுரையீரல் - இதய மாற்று அறுவைசிகிச்சை நிபுணர்கோவினி பாலசுப்பிரமணி

- பா.பிரவீன் குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick