நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதும் ஆபத்து!

வேட்டை, வேளாண்மைச் சமூகமாக இருந்தபோது மனிதன் நீண்ட நேரம் நின்றுகொண்டே இருக்க வேண்டியதாக இருந்தது. நடுநடுவே ஓய்வும் ஓட்டமுமாக வாழ்க்கை கழிந்தது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உட்கார்ந்தே வேலை செய்வது அதிகரித்துவிட்டது. தூங்கும் நேரத்தைவிட அமர்ந்திருக்கும் நேரம் அதிகரித்துவிட்டது. இதுகூட பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

ஒரு நாளில்...

8 மணி நேரம் தூக்கம் 16 மணி நேரம் விழித்திருக்கிறோம்.

நீண்ட நேரம் உட்காரும்போது...

கால் தசைகளின் மின்னோட்ட செயல்பாடு குறைகிறது.

கலோரி எரிப்பு நிமிடத்துக்கு ஒன்று என்ற அளவுக்குக் குறைந்துவிடுகிறது.

கொழுப்பை உடைக்கும் என்சைம் அளவு 90 சதவிகிதம் குறைகிறது.

ஒரு மணி நேரத்துக்கும் மேல் அமர்ந்திருப்பதால்...

நல்ல கொழுப்பு அளவு குறைய ஆரம்பிக்கிறது.

இன்சுலின் செயல்திறன் குறைகிறது.

பாதிப்பைத் தவிர்க்க...

தினசரி 30 நிமிடப் பயிற்சி மட்டும் போதாது.

உடலை வளைத்து, கால் கட்டை விரல்களைத் தொடுவது போன்ற ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்யலாம்.

அலுவலகத்தில் நடக்கலாம். அவ்வப்போது எழுந்து, கைகளை விரித்துக் குதிக்கும் ஜம்பிங் ஜாக் செய்யலாம்.

இதில்...

1 மணி நேரம் விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற அதிக உடல் உழைப்புக்குச் செலவிடுகிறோம்.

4-5 மணி நேரம் அன்றாட வேலைகள், அலுவலகம் அல்லது பள்ளி, கல்லூரிக்குக் கிளம்புவது, பயணிப்பது என மிகக் குறைந்த நேரமே உடல் உழைப்புக்குச் செலவிடுகிறோம்.

9-10 மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்வது, டி.வி பார்ப்பது எனக் கழிக்கிறோம்.

உட்கார்ந்தே வேலை செய்ய வேண்டியவர்களுக்கு, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகிறது.

டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு 90 சதவிகிதம் அதிகரிக்கிறது.

- பா.பிரவீன் குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick