இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 6

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ன்றைய வாழ்க்கைமுறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் மாறுபடுவதால், நோய்களும் அதன் சிக்கல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. விலைவாசி அதிகரிப்பதால், மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவும் ராக்கெட் வேகத்தில் செல்கிறது. சாதாரணத் தொற்றுக்காய்ச்சலுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என்றாலும், குறைந்தது ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. வார்டு கட்டணம், நர்சிங் கட்டணம், மருந்துச் செலவு, லேப் பரிசோதனைக் கட்டணம், ஸ்பெஷலிஸ்ட் கட்டணம்... என ஏராளமான கட்டணங்கள் வரிசைகட்டுகின்றன. இதுவே, ஐ.சி.யு எனப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டால், அறைக் கட்டணம் பல மடங்கு அதிகரித்துவிடும். கார்ப்பரேட் மருத்துவமனைகளில் சாதாரண வார்டுகளில், ஒரு ஸ்கிரீன் மட்டுமே போட்டுப் பிரித்துவிட்டு 1,800 முதல் 3,000 ரூபாய் வரை வார்டுக்கான கட்டணம் வசூலிக்கின்றனர். இதுவே, தனி அறை, இரண்டு பேர், மூன்று பேர் சேர்ந்து ஓர் அறையில் தங்குவதுபோல இருந்தால், கட்டணம் குதிரை வேகத்தில் செல்லும். இதய சிகிச்சைக்கு என்றால், ரூ 2 லட்சம் முதல் 5 லட்சம் வரைகூட செலவாகும். இது நகரம் மற்றும் மருத்துவமனையைப் பொறுத்து மாறுபடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்