ஜனவரி 25 உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

'தூர விரட்டப்பட வேண்டியது தொழுநோய் தானே தவிர... நோயாளிகள் அல்ல!' என்ற காரணத்தால்தான், 1954ல் இருந்து, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தொழுநோய் ஒழிப்பு விழிப்புஉணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தொழுநோயாளிகள் இல்லாத உலகம் என்ற கருத்தில், விழிப்புஉணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் வரையரையின்படி, 10 ஆயிரத்தில்் ஒருவருக்குப் பாதிப்பு இருப்பதுதான், ஒரு நாட்டில் தொழுநோய் குறைந்துவிட்டதற்கான குறைந்தபட்ச மதிப்பீடு. இதன்படி பார்த்தால் 2006ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் தொழுநோய் பாதிப்பு விகிதம் 10 ஆயிரம் பேரில் 0.84 சதவிகிதம்தான். இதனால் இந்தியாவில் தொழுநோய் ஒழிந்துவிட்டதாகக் கருதப்பட்டாலும், உலகளவில் உள்ள தொழுநோயாளிகளில், 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள்.  நோயைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததும், இங்குள்ள வறுமையும், சுகாதாரமற்ற மோசமான வாழ்க்கைமுறையும்தான் இந்த நிலைமைக்குக் காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்