வீட்டு சாப்பாடு

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்உணவு

ல்லோருடைய வீட்டிலும் அடுப்பைப் பற்றவைத்ததும், முதலில் துவங்குவது காபி போடும் வேலைதான். மேட்டுப்பட்டி கிராமத்தில் நான் சிறுவனாக வளர்ந்தபோது, காலையில் காபி குடிக்கும் பழக்கம் அந்த ஊரில் இருந்தது இல்லை. எப்பவாச்சும் இரவு வேளைகளில், குறிப்பாக, மழைக்காலங்களில்  கருப்பட்டிக் காபி போடுவார்கள். பெரும்பாலான வீடுகளில் ஆட்டுப்பால் காபிதான். நல்ல கெட்டியாக இருந்ததாக நாக்கில் நினைவு தங்கியிருக்கிறது. அது காபியா... டீயா என்கிற பேதமெல்லாம் எங்களுக்குத் தெரியாது. சின்ன பாக்கெட்டில் டீத்தூள் வரும். காபி என்பது வட்டவட்டமான வில்லைகளில் வரும். ஒரு வில்லை மூணு  பைசா. கடையில் வாங்கி வருவது சிறுவர்களின் முக்கியப் பணி என்பதால், அந்த வில்லைகள் நினைவிருக்கின்றன.

அடுப்பில் வெந்நீரைக் கொதிக்க வைத்து, அந்தத் தூளைப்போட்டுக் கொதிக்கவைத்து மூடி வைப்பார்கள். கருப்பட்டியைத் தனியாக உடைத்துப்போட்டுக் கொதிக்கவைத்து, கருப்பட்டித்தண்ணி தயாரிப்பார்கள். ‘பாலில் கருப்பட்டியை அப்படியே போட்டுக் காய்ச்சினால், பால் திரிந்துவிடும்’ என்பாள் பாட்டி. பாலைத் தனியாகக் காய்ச்சி, பிறகு மூன்றையும் கலந்து சுடச்சுட ஈய டம்ளர்களில் ஊற்றி (அப்போது எவர்சில்வர் புரட்சி வந்திருக்கவில்லை) சூடு தாங்காமல் துணியைச் சுற்றிப் பிடித்துக்கொண்டு  வட்டமாக உட்கார்ந்து, ஊதி ஊதிக் குடிப்பார்கள். அந்த இரவுகள் இருட்டோடும் வெளிச்சக்கீற்றுகளோடும் மழையின் குளிர்ச்சியோடும், சிரிப்பு கலந்தப் பேச்சுகளோடும் எப்பவும் நினைப்பில் இருக்கிறது. அதுமாதிரியான இரவுகள் வாழ்வில் அபூர்வமாகத்தான் வாய்க்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்