ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“தொழில்நுட்பம் வளரும்போது புதிது புதிதாக நோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. வீடு, அலுவலகம் என எல்லா இடங்களிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டது. கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போது, நம் கண்ணின் மட்டத்தில் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் இருக்க வேண்டும். உயரம் அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால், கழுத்து வலி வரலாம். வீட்டில் டி.வி பார்க்கும்போது, கோணலாகத் தலையைவைத்துப் பார்ப்பது, பெரிய தலையணையை வைத்து படுத்தபடி பார்ப்பது என்று, நாமாகவே கழுத்துவலியை வரவைத்துவிடுகிறோம்” என்கிறார் எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணர் ராஜ் கண்ணா.

“முழங்கால் மூட்டு வலி வயதானவர்களுக்கு மட்டும் வருவது இல்லை. 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும்கூட வரலாம். நாற்காலியில் அல்லது தரையில் உட்கார்ந்து எழுந்திருக்கும்போதோ, மாடிப்படி ஏறி இறங்கும்போதோ, முழங்கால் மூட்டின் முன்பகுதியில் வலி இருந்தால், அதுதான் மூட்டு வலியின் ஆரம்ப அறிகுறி. அப்படி இருக்கும்போதே, அருகில் உள்ள எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணரை அணுகினால், இந்தப் பிரச்னையை எளிதில் குணப்படுத்தலாம். மூட்டுத் தேய்மானம் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், கீழே உட்காருவது, மாடிப்படி ஏறி இறங்குவது, இந்தியன் டைப் கழிப்பறைகளைப் பயன்படுத்துவது போன்ற செயல்களை அதிகம் செய்வதால், மூட்டுத் தேய்மானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.” என்கிறார் டாக்டர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்