பன்றிக் காய்ச்சல்... பயம் வேண்டாம்!

கருணாநிதி, பொது மற்றும் சர்க்கரை நோய் மருத்துவர்ஹெல்த்

சில ஆண்டுகளுக்கு முன்பு, உலகையே பீதிக்கு ஆளாக்கிய பன்றிக்காய்ச்சல், இப்்போது மீண்டும் தமிழகத்துக்குள் நுழைந்துள்ளது. சென்னையில் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக ஒருவரைக் கண்டறிந்த நிலையில், சென்னையை அடுத்த மறைமலைநகரில் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொஞ்சம் பாதுகாப்பாக இருந்தால், பன்றிக்காய்ச்சலைத் தவிர்க்க முடியும், ஒருவருக்குப் பன்றிக்காய்ச்சல் வந்தாலும் சரிப்படுத்த முடியும்.

சாதாரண வைரஸ் காய்ச்சல் மூன்று நாட்களில் சரியாகிவிடும். ஆனால், பன்றிக் காய்ச்சல் மூன்று நாட்களுக்குப் பிறகுதான் தீவிரமாகும். இருமல், தும்மல் அதிகமாக இருக்கும். தலைவலி, தொண்டை வலி, உடல் வலி, கண்களில் எரிச்சல் என்று, பாதிப்புகள் தொடர்ச்சியாக வரும். சிலருக்கு இடைவிடாத வாந்தி, வயிற்றுப்போக்கும் வரலாம். இருமல் அதிகமாகி எந்த மருந்துக்கும் கட்டுப்படாது. இருமலை அலட்சியப்படுத்தினால், நுரையீரலின் தசைகள் ஆரோக்கியத்தை இழந்து, சுருங்க ஆரம்பித்துவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்