நோய் எதிர்ப்பு சக்திக்கு...

ஆப்பிள் பேரிக்காய் ஜூஸ்உணவு

டி.கிருஷ்ணமூர்த்தி, சீஃப் டயட் கவுன்சலர்

தேவையானவை: ஆப்பிள் 1, பேரிக்காய் சிறியது -2.

செய்முறை: ஆப்பிள், பேரிக்காய்களை தோல் சீவி, விதை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். சிறிது நீர் சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைக்கவும். பழங்களின் இனிப்புச் சுவையே போதுமானது. தேவை எனில் சிறிது சர்க்கரை, ஐஸ்கட்டி சேர்த்துக்கொள்ளலாம்.

பலன்கள்:

 வைட்டமின் ஏ,சி,கே மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புக்கள் இதில் நிறைய உள்ளன.

 தொடர்ந்து இந்த ஜூஸ் குடித்துவந்தால், தோல் பொலிவு அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி கூடும். நோய்கள் அண்டாது.

இதய நோயாளிகள், சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்கள், புற்றுநோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என அனைவருக்கும் ஏற்றது. இவர்கள் சர்க்கரை சேர்க்காமல் அருந்த வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடாமல், அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

 குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஜூஸ் அருந்துவது நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு உள்ளது.

- பு.விவேக் ஆனந்த், படம்: கு.பாலசந்தர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick