நாட்டு மருந்துக் கடை - 18

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ணியன் பூங்குன்றனார் காலம் முதல் இன்றைய கம்ப்யூட்டர் காலம் வரை, ஒரு கனி நம் வீட்டிலும் தோட்டத்திலும் காட்டிலும் உறவாடிவருகிறது என்றால், அது நெல்லி.  ஏகப்பட்ட விதைகளுடன் இருந்த வாழைப்பழத்தின் பல வகைகள், மரத்தில் காய்க்கும் ஐஸ்கிரீம் போல விதை காணாமல் போன ‘ஹைபிரிட்’ ரகமாகிவிட்டன. கும்பகோணத்துப் புளிப்பு மாதுளை, காபூல் இனிப்பு மாதுளையாகிவிட்டது. மரத்தில் இருந்து விழுந்தால், சிதைந்துவிடும் மெல்லிய தோல் சிவப்புக் கொய்யா, கடித்தால் பல்லை வலிக்கச்செய்யும் முரட்டுத்தோலுடன் லக்னோ கொய்யாவாகிவிட்டது. பன்னீர் திராட்சையின் விதை பறிக்கப்பட்டுவிட்டது; நிறம் மறைக்கப்பட்டு விட்டது. நாவலும் இலந்தையும் நகர்ப்புறக் குழந்தைகள்போல, பருத்துப்போய் அடையாளத்தைத் தொலைத்துவிட்டன. ஆனால், நெல்லி அதிகம் மாறவில்லை. ஊட்டம் பெற்ற வீரிய ஒட்டு ரகங்கள் வந்தாலும், இன்னும் பெருவாரியாகத் தன் அபூர்வ பாரம்பர்யக் குணத்தை நெல்லி தொலைக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்