சருமப் பொலிவுக்கு வெள்ளரி-ஆரஞ்சு ஜூஸ்

தேவையானவை: கமலா ஆரஞ்சு - 4, நடுத்தர அளவு வெள்ளரி - 1, செலரி - சிறிதளவு, இஞ்சி - நறுக்கியது சிறிதளவு, பனங்கற்கண்டு அல்லது பனஞ்சர்க்கரை - தேவையான அளவு. 

செய்முறை: ஆரஞ்சு மற்றும் வெள்ளரியைத் தோல் உரித்து, செலரி, இஞ்சி, பனங்கற்கண்டு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைத்து, வடிகட்டிப் பருக வேண்டும். தேவை எனில், சிறிது ஐஸ் கட்டி சேர்த்துக்கொள்ளலாம்.

பலன்கள்:

ஆரஞ்சு, செலரி, வெள்ளரி, இஞ்சி ஆகியவை கலோரி குறைந்தவை. ஆரஞ்சுப்பழத்தில் இருக்கும் பெக்டின் என்ற ரசாயனம், குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும்.

வெள்ளரி நீர்ச்சத்து நிறைந்தது, உடலுக்குக் குளிர்ச்சி தரும். செலரி ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. செலரிக்குப் பதிலாக புதினா, கொத்தமல்லி சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம்.

இஞ்சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இஞ்சி குறைவாகத்தான் ஜூ்ஸில் சேர்க்க வேண்டும், அதிகம் சேர்க்கக் கூடாது. இஞ்சி செரிமான சக்தியை மேம்படுத்தும். குமட்டலைத் தடுக்கும்.

வாரம் ஒரு முறை இந்த ஜூஸ் பருகிவந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி, உடல் புத்துணர்வு பெறும். நுரையீரலைச் சுத்தமாகும்.

சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இந்த ஜூஸ் அருந்தலாம். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு ஏற்ற ஜூஸ் இது.

உணவுக் குழாயில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இந்த ஜூஸுக்கு உண்டு. வைட்டமின் சி அதிகம் கிடைக்கும் என்பதால், சருமம் பொலிவு பெறும்.

உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகவும் ஏற்றது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கும், உடல் பருமன் கொண்டவர்கள், பனங்கற்கண்டு குறைவாகச் சேர்த்துப் பருகினால், கூடுதல் பலன் கிடைக்கும்.

‘ஃப்ளேவனால்’ என்கிற ஆன்டிஆக்ஸிடன்ட் இதில் இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உதவி புரியும். நினைவாற்றலைப் பெருக்கும். பொட்டாசியம் இந்த ஜூஸில் அதிக அளவு இருக்கிறது. எனவே, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது.

- பு.விவேக் ஆனந்த்

படம்: தே.தீட்ஷித்

உதவி: சங்கம் ஹோட்டல், திருச்சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick