நாட்டு மருந்துக் கடை - 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஹெல்த் / உணவே மருந்து!

திகக் காரமும் துவர்ப்பும்கொண்ட சாதிக்காய், நம்மவர்களை மட்டுமல்லாமல் உலகையே வசீகரித்த ஒரு மூலிகை. மலேசியாவில் பினாங்கு மற்றும் நமது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து உலகெங்கும் செல்வாக்கு செலுத்திவரும் சாதிக்காய் குறித்த வரலாற்றுச் செய்திகள் ஏராளம் உள்ளன. இதற்குக் கிடைத்த அதீத வரவேற்பால், அரபுநாட்டு மாலுமிகள் இதை எங்கிருந்து எடுத்து வருகிறார்கள் என்பதையே பல நூறு ஆண்டுகளாக பெரும் ரகசியமாக வைத்திருந்தனராம். சாதிக்காயின் கனி, ஊறுகாயாகப் பயன்படும். இதன் உள் இருக்கும் விதைதான் சாதிக்காய். கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சூழ்ந்து இருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதிதான் சாதிபத்திரி. இதில், சாதிக்காய் எனும் விதையும் சாதிபத்திரி இதழும்தான் மணமும் மருத்துவக்குணமும் கொண்டவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்