ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“இதய நோய் என்றால் பலரும் மாரடைப்பை மட்டுமே நினைக்கின்றனர். ஆனால், இதயத்தில், ரத்தக் குழாய், மின்னோட்டம் என இரண்டு வகையான பிரச்னைகள் ஏற்படலாம். இதயத் திசுக்களுக்கு மூன்று ரத்தக் குழாய்கள் வழியாக ரத்தம் பாய்கிறது. இதில், ஏதாவது ஒரு குழாயில் அடைப்பு ஏற்பட்டாலும் ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படலாம். இதயம் துடித்தலைத் தூண்டும் மின்னோட்டப் பாதையில் பிரச்னை ஏற்பட்டால், `சடர்ன் கார்டியாக் அரெஸ்ட்’ எனப்படும் திடீர் இதயத் துடிப்பு முடக்கம் ஏற்படலாம்” என்கிறார் ‘மெட்ராஸ் மெடிக்கல் மிஷன்’ மருத்துவமனையின் இதயநோய் மற்றும் எலக்ட்ரோஃபிசியாலஜி நிபுணர் கே.ஜெய்சங்கர்.

``இதயத்தின் பம்பிங் திறனை `எஜெக்‌ஷன் ஃபிராக்‌ஷன்’ (Ejection fraction) என்று சொல்வோம். இதயத்தின் பம்பிங் திறன் 55 முதல் 70 சதவிகிதம் இருக்க வேண்டும். மாரடைப்பு ஏற்படும்போது இது குறைந்துவிடும். இது 35-க்கும் கீழ் இறங்கினால் இதயச் செயல் இழப்பு ஏற்படும். அறிகுறிகளைப் புறக்கணித்து, சிகிச்சை எடுக்கத் தவறும்போது, இதயம் மேலும் பலவீனம் அடையும். பலூன்போல வீக்கம் அடையும். இதயத்தின் அமைப்பே மாறிவிடும். பிறகு, பழையநிலைக்குக்கொண்டுவருவது மிகமிகக் கடினம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்