உடலினை உறுதிசெய் - 11

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வீராசனாஃபிட்னெஸ்

யோகாவை நீண்ட நாள், நீண்ட நேரம் செய்தால்தான் பலன் கிடைக்கும் என்று இல்லை. உடனடி ரிலாக்ஸ் தரும் யோகப் பயிற்சிகளும் உள்ளன. இதில் முக்கியமானது `வீராசனா’.

தரையில் மண்டியிட்டு, பாதங்களை ‘ஆங்கில வி’போல விரித்து, பின்னங்கால்களில் (வஜ்ராசனம் நிலையில்) உட்கார வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். இப்போது, வலது பாதம் தரையில் பதியும்படி காலை மடிக்க வேண்டும். கால் மூட்டின் மீது வலது கை முட்டியை மடித்து வைக்க வேண்டும். உள்ளங்கையை கன்னத்தில் பதித்துக்கொள்ள வேண்டும். இடது கையில் சின் முத்திரை வைத்துக்கொள்ள வேண்டும். கண்களை மூடி, இந்த நிலையில் இரண்டு நிமிடங்கள் இருக்க வேண்டும். பின்னர் இதேபோல், இடது காலுக்குச் செய்ய வேண்டும்.

கவனிக்க: மூட்டுவலி, மூட்டு வீக்கம், ஆர்த்ரைடிஸ், ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் பிரச்னை உள்ளவர்கள், இதைத் தவிர்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்