அந்தப்புரம் - 30

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: ஸ்யாம்

ர்ப்பம் தவிர்க்கும் வழிமுறைகள் பற்றி இரு இதழ்களாகச் சொல்லிவந்தேன். இது தொடர்பாக ஏராளமான சந்தேகங்களை வாசகர்கள் எழுப்பவே, இந்த இதழ் முழுக்க வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்க உள்ளேன். பொதுவாக, பலரும் எழுப்பிய சந்தேகம், கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்வது பற்றித்தான் இருந்தது.

“எனக்கு இப்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணம் ஆன புதிதில் குழந்தை வேண்டாம் என மாத்திரை எடுத்துக்கொண்டேன். ஆனாலும், எனக்கு முதல் குழந்தை நின்றது. இது எப்படிச் சாத்தியமானது?”

பி.சிவரஞ்சனி, மதுரை.

“மாத்திரை எடுத்துக்கொள்பவர் செய்யும் தவறுகள்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. நீங்கள் மாத்திரையைத் தவறாமல் எடுத்துக்கொண்டீர்களா என்ற தகவல் தெரியவில்லை. மாத்திரையைத் தவறவிடுவதுதான் மாத்திரை தோல்வியடைய முக்கியக் காரணமாக இருக்கிறது. மாத்திரை காலியாகிவிடுவது, மாத்திரை எடுப்பதால் ஏற்படும் தீவிர வாந்தி போன்ற காரணங்களால் மாத்திரை எடுத்துக்கொள்வதை சில பெண்கள் தவிர்க்கின்றனர். அல்லது தற்காலிகமாக நிறுத்திவிடுகின்றனர். இதன் காரணமாக கரு உருவாகிவிடுகிறது. இந்த மாதிரியான மாத்திரை எடுக்கத் தவறிய நேரத்தில் இருந்து, 12 மணி நேரத்துக்குள் மாத்திரை எடுத்துக்கொள்ளவில்லை எனில், அடுத்த ஏழு நாட்களுக்கு ஆணுறை போன்ற வேறு வகையான கருத்தடை முறைகளைப் பயன்படுத்தும்படி ஃபேமிலி பிளானிங் அசோசியேஷன் (எஃப்.பி.ஏ) அறிவுறுத்துகிறது. மாத்திரையைக் காட்டிலும் இன்னும் சில நம்பகமான கருத்தடை முறைகள் உள்ளன. எனவே, மாத்திரையைத் தவறவிடும் பெண்கள் இந்த முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கருத்தரிப்பதைத் தவிர்க்க முடியும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்