பி.சி.ஓ.டி - தடுக்க... தவிர்க்க!

முகத்தில் அதிகமாக முகப்பரு வரவே,  ஏதேதோ வீட்டு சிகிச்சைகள் செய்துபார்த்தும் கட்டுப்படாமல் டாக்டரிடம் சென்றார் ஷர்மி. உடல் பருமனாக, மெல்லியதாக மீசை வளர்ச்சியுடன் இருந்த ஷர்மியைப் பார்த்ததுமே டாக்டருக்குப் புரிந்துவிட்டது. “28 நாட்களில் மாதவிலக்கு சுழற்சி சரியாக வந்துவிடுமா?” என்று கேட்க, “இல்லை டாக்டர். இரண்டு, மூன்று மாதங்கள்கூட ஆகும்... வந்தா ஹெவியா பிளீடிங் இருக்கும்” என்றார். உடனே, மகளிர் நல மருத்துவரைச் சந்திக்கும்படி அறிவுறுத்தினார் டாக்டர்.

‘இதற்கு எதற்கு மகளிர் டாக்டரைப் பார்க்க வேண்டும்’ என்ற குழப்பத்தோடு ஷர்மி சென்றார். அங்கே அவருக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு பி.சி.ஓ.டி (Polycystic ovarian disease (PCOD))எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

பெண்ணுடைய சினைப்பையில் லட்சத்துக்கும் மேல் சினைமுட்டைகள் முதிர்ச்சியடையாமல் இருக்கும். ஒவ்வொரு மாதமும் இவற்றில் சில முதிர்ச்சியடைய ஆரம்பிக்கும். ஆனால், ஒன்றே ஒன்று மட்டுமே முழுமையாக முதிர்ச்சியடையும்.  பெண்ணின் வாழ்நாளில் 360 சினைமுட்டைகள்தான் ஆரோக்கியமான நிலையில் முழுமையாக வளர்ச்சியடைந்து வெளிவரும். 

பொதுவாக, ஆரோக்கியமான பெண்களுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யும்போது, அவர்கள் சினைப்பையில் 4 முதல் 10 சினைமுட்டைகள் இருக்கும். இவை அனைத்தையுமே சினைமுட்டைகள் என்று சொல்ல முடியாது. சில நீர்க்கட்டிகளாகத் தோன்றி மறையும். இவை, 2-3 செ.மீ அளவில் இருக்கும். இந்த நீர்க்கட்டிகளின் எண்ணிக்கை 12-க்கு மேல் இருந்தால், அதை பி.சி.ஓ.டி என்கிறோம்.

பெண்ணின் சினைப்பையில், மிகச்சிறிய அளவில் ஆணுக்குரிய ஹார்மோன் சுரக்கும். பி.சி.ஓ.டி காரணமாக இந்த ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால், ஆண்களுக்கு இருப்பதுபோல, மீசை வளர்ச்சி மற்றும் முகப்பரு, சீரற்ற மாதவிலக்கு, உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்