கல்லீரல் செயலிழப்பு காரணம் என்ன?

ரோஹன் - ஸ்வேதா தம்பதிக்குப் பிறந்த அழகான குழந்தை, வருண். இரண்டு வயதுதான் ஆகிறது. திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்படவே, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவனுக்கு மஞ்சள்காமாலை இருப்பது கண்டறியப்பட்டது. என்ன சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இதனால், பாதிப்பு மிகத் தீவிரமான நிலையில், மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றனர். அந்தக் குழந்தைக்கு கல்லீரல் செயலிழந்துவிட்டது, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலை. “மது அருந்தினால் கல்லீரல் செயலிழக்கும் என்பது தெரியும்... ஒரு தவறும் செய்யாத சின்னக்குழந்தைக்கு எப்படி கல்லீரல் செயலிழந்தது?” எனக் கண்ணீர் மல்கக் கேட்டார் ரோஹன்.

வருண் மட்டும் அல்ல... இந்தியாவில் 3,000 குழந்தைகளில் ஒரு குழந்தை கல்லீரல் செயலிழந்து மரணத்தைத் தழுவுகிறது. சில குழந்தைகளுக்குப் பிறந்தவுடனேயே கல்லீரல் செயலிழப்பு ஏற்படுகிறது. ஏன் இந்த நிலை... எதனால் இந்தப் பிரச்னை வருகிறது... இதற்கு என்னதான் தீர்வு?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்