ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“உடலின் மிகப்பெரிய தொழிற்சாலை, கல்லீரல். நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் சத்துக்களைக் கிரகித்து உடலுக்கு அனுப்புவதும், உணவில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதும் கல்லீரல் செய்யும் முக்கியமான பணிகள். மஞ்சள்காமாலை, ஹெபடைட்டிஸ் வைரஸ்கள், ஃபேட்டி லிவர், `லிவர் சிரோசிஸ்’ எனப்படும் கல்லீரல் சுருக்கம் போன்ற கல்லீரல் பாதிப்புகள் இன்று பரவலாகக் காணப்படுகின்றன. கல்லீரலில் ஏற்படும் சிறுசிறு பாதிப்புக்கள் நமக்கு நேரடியாகத் தெரியாது. பெருமளவு கல்லீரல் பாதிக்கப்பட்ட பின்னர்தான் பிரச்னை வெளிப்படும். எனவே, நாம் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். 40 வயதைத் தாண்டியவர்கள், மது அருந்துபவர்கள் கல்லீரல் செயல்திறன் அறியும் பரிசோதனையை ஆண்டுக்கு ஒரு முறை செய்துகொள்வது நல்லது” என்கிறார், கல்லீரல் சிறப்பு அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் முருகன். 

“கல்லீரலைப் பாதிக்கும் சில வைரஸ்களுக்கு, இப்போது  தடுப்பூசிகள் உள்ளன. இவற்றை ஒவ்வொருவரும் போட்டுக்கொள்வதன் மூலம் இதன் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். கல்லீரல் பாதிப்பு ஏற்பட முக்கியக் காரணமாக இருப்பது மதுப்பழக்கம். மதுவில் உள்ள ஆல்கஹால் கல்லீரலைச் சிதைக்கும். தொடர்ந்து அதிக அளவு மது அருந்தும்போது, கல்லீரலின் செயல்திறன் பாதிக்கப்படும். ஒரு கட்டத்தில் கல்லீரல் சுருக்க நோய் வந்துவிடும். கல்லீரல் சுருக்க நோய் முற்றியநிலையில் கல்லீரல் செயலிழந்துவிடும். ஒருவேளை கல்லீரல் செயலிழந்துவிட்டால், கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே தீர்வாக நேரிடும். எனவே, மதுவைத் தவிர்ப்பதும், ஆண்டுக்கு ஒரு முறையாவது கல்லீரல் பரிசோதனை செய்துகொள்வதும் கல்லீரலைக் காக்கும்” என்கிறார் டாக்டர்.

கல்லீரலின் பணிகள் என்னென்ன?

மஞ்சள்காமாலை ஏன் ஏற்படுகிறது?

ஹெபடைட்டிஸ் வைரஸ்களைத் தடுப்பது எப்படி?

ஃபேட்டி லிவர் பிரச்னைக்கு என்ன தீர்வு?

கல்லீரல் சிரோசிஸ் எதனால் வருகிறது?

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையால் பலன் உண்டா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்