அலைபாயும் கூந்தலுக்கு...

றே வாரத்தில் அபாரமான முடி வளர்ச்சி என போட்டோஷாப் ஜாலங்களை விளம்பரமாக வெளியிட்டு, கல்லா கட்டிக்கொண்டிருக்கின்றன, கூந்தல் தைல நிறுவனங்கள். முடி கொட்டுதல் என்பது இன்று பரவலாகச் சொல்லப்படும் பிரச்னை. முறையான பராமரிப்பு இருந்தால், முடி கொட்டுதல் பிரச்னையைப் போக்க முடியும்.

வெயிலில் அலைவது, தவறான உணவுப்பழக்கம், உடல்சூடு, தொடர்ந்து கெமிக்கல் சிகிச்சைகள் எடுப்பது, வீரியம் உள்ள கெமிக்கல் ஷாம்பு பயன்படுத்துவது, கலரிங் செய்வது, மனஅழுத்தம், டென்ஷன் போன்ற பல்வேறு காரணங்களால் முடி கொட்டுதல் பிரச்னை இருக்கலாம். ஆனால், முறையாகப் பராமரித்தால் மீண்டும் முடி வளர்வது உறுதி.

ஊட்டச்சத்துக் குறைபாடு, தைராய்டு பிரச்னை, மரபியல் காரணங்கள், வழுக்கை விழுதல், பருவம் எய்தும் சமயம், மெனொபாஸ், கர்ப்பகாலம் போன்ற காரணங்களால் முடி கொட்டும் பிரச்னை ஏற்படலாம். மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது முக்கியம். இதனுடன் உணவுமுறையை ஊட்டச்சத்துள்ளதாக மாற்றிக்கொள்வது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்