அலர்ஜியை அறிவோம் - 7

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அடுக்குத் தும்மல்ஹெல்த்

டுக்குத் தும்மலைக் கவனிக்காமல் விட்டால் அது சைனஸ் பிரச்னையாக உருவெடுத்து ரொம்பவே சிரமப்படுத்தும் என்று கடந்த இதழிலேயே சொல்லியிருந்தேன். தொடர் ஒவ்வாமை காரணமாக மூக்குப் பகுதியில் உள்ள சைனஸ் அறைகள் மற்றும் மியூக்கஸ் லைனிங்கில் வீக்கம் ஏற்பட்டு சைனஸ் பிரச்னை ஏற்படுகிறது.

‘சைனஸ்’ என்றால் என்ன?

நம் மூக்கைச் சுற்றி நான்கு ஜோடி காற்றுப்பைகள் உள்ளன. இவற்றுக்கு சைனஸ் (Paranasal Sinuses) என்று பெயர். மூக்கின் உட்புறமாக புருவத்துக்கு மேலே நெற்றியில் உள்ளது, ஃபிரான்டல் சைனஸ். மூக்கின் இரு புறமும் கன்னங்களில் உள்ளவை, மேக்ஸிலரி சைனஸ். கண்களுக்கும் மூக்குக்கும் நடுவில் உள்ளது, எத்மாய்டு சைனஸ். கண்களுக்குப் பின்புறம் மூளையை ஒட்டி உள்ளது, ஸ்பீனாய்டு சைனஸ். இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும் பிரச்னைதான்.

நாம் சுவாசிக்கும் காற்றை, தேவையான வெப்பத்தில் நுரையீரலுக்குள் அனுப்பும் முக்கியமான வேலையை இந்த சைனஸ் காற்று அறைகள் செய்கின்றன. சாதாரணமாக சைனஸ் அறைகளில் இருந்து சிறிதளவு திரவம் சுரந்து, மூக்குக்கு வரும். மூக்கில் ‘மியூகஸ் மெம்பரேன்’ எனும் சளிச்சவ்வு இருக்கிறது. சைனஸ் திரவம் இதை ஈரப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதனால், வெளிக்காற்று வெப்பத்துடன் நுழைந்தாலும், அது ஈரப்படுத்தப்பட்டு நுரையீரலுக்குள் அனுப்பப்படுகிறது. இந்த சைனஸ் அறைகளின் திரவ வடிகால்கள் அடைபட்டு, அங்கு திரவம் தேங்கும்போது, அங்கு அழற்சி உண்டாகும். இதன் விளைவால் சைனஸ் பிரச்னை (Sinusitis) ஏற்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்