இனி எல்லாம் சுகமே - 7

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செரிமானம் அறிவோம்!ஹெல்த்

செரிமானப் பிரச்னைகளில் மிக முக்கியமானது எதுக்களிப்பு. கேஸ்ட்ரோ ஈசோஃபீகல் ரெஃப்லெக்ஸ் (Gastro esophageal Reflux Disease (GERD)) என்பதைத்தான் `எதுக்களித்தல்’ என்கிறோம். இது, சர்வசாதாரணமாக எப்போதாவது ஏற்படக்கூடிய ஒரு பிரச்னை. ஆனால், நாள்பட்ட எதுக்களித்தல் இருந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரி, எதுக்களித்தல் ஏன் வருகிறது... எப்படி வருகிறது? 

உணவுக்குழாய்க்குக் கீழே இரைப்பை அமைந்திருக்கிறது. உணவுக்குழாயையும் இரைப்பையையும் இணைக்கும் இடத்தில் ஒரு வால்வு இருக்கும். இந்த வால்வு அவசியம் இல்லாமல் திறக்கும்போதுதான், உணவுக்குழாயில் பிரச்னை வருகிறது. வயிறு நிறையச் சாப்பிடும்போது, உணவு இரைப்பை முழுதும் நிறைந்து, மேலே ஏறி உணவுக்குழாயில் இருக்கும் கீழ் வால்வைத் தள்ளும், கீழ் வால்வு கொஞ்சம் மெதுவாகத் திறந்து கொடுக்கும்போது, இரைப்பையில் இருக்கும் அமிலம், உணவு போன்றவை உணவுக்குழாயில் மேலே ஏறி பிரச்னையை ஏற்படுத்துகிறது. இரைப்பையில் சுரக்கும் பெப்ஸின், கல்லீரலில் சுரக்கும் பித்தநீர் போன்றவைகூட சில நேரங்களில் இரைப்பையில் இருந்து மேலே ஏறிவிடும்.

வயிறு நிரம்பச் சாப்பிட்டால்தான் எதுக்களித்தல் வரும் என்பது இல்லை, வேறு சில காரணங்களாலும் ஏற்படலாம். இரைப்பை நெஞ்சாங்கூட்டில் ஏறிக்கொள்ளும் ‘ஹையாடஸ் ஹெர்னியா’ இருப்பவர்களுக்கு அடிக்கடி எதுக்களித்தல் பிரச்னை ஏற்படலாம். ஆஸ்துமா, இதய நோய்கள், ஆஸ்டியோபொரோசிஸ் போன்ற பிரச்னைகளுக்காக மாத்திரை சாப்பிடுவதால் உணவுக்குழாயில் இருக்கும் வால்வின் செயல்திறன் குறைந்து, எதுக்களித்தல் வரலாம். வயது அதிகரிக்கும்போது உணவுக்குழாய் வால்வுகளின் செயல்திறன் இயல்பாகவே குறையும். மனிதனின் வாழ்நாள் அதிகரித்து வருவதால்தான், எதுக்களித்தல் பிரச்னையும் அதிகரிக்கிறது. எதுக்களித்தல் காரணமாக சைனஸ், தொண்டைக் கமறல், குரல் தேய்தல், குரல் பிசிறுதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.

எதுக்களிப்பு ஏற்பட்டால் உடனே சோடா அருந்துவது வாடிக்கையாகிவிட்டது. இது பெருந்தவறு. சோடா அருந்தி ஏப்பம் விடும்போது வாய் வழியே வாயுக்கள் வெளியேறிவிடும், வாயுக்கள் வெளியேறுவதால், எதுக்களித்தல் சீராகிவிடும் என நினைக்கிறார்கள். இது தவறு. இது ஒரு தற்காலிக நிம்மதி உணர்வே தவிர, நிரந்தரத் தீர்வு இல்லை. இந்தப் பழக்கம் தொடர்ந்தால், கூடுதலாய் அடிக்கடி தொடர் ஏப்பம் வரும் தொந்தரவும் வந்துசேரும்.   என்றோ ஒரு நாள் எதுக்களித்தல் பிரச்னை இருந்தால்,  மருத்துவர் பரிந்துரைப்படி, ஆன்டாசிட் மாத்திரைகளையோ, மருந்தையோ வாங்கிச் சாப்பிட்டால் சரியாகிவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்