இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

நாம் மருத்துவக் காப்பீடு எடுப்பதே சிகிச்சை பெறுவதில் பணத்துக்காகத் தாமதமோ, தடையோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்குத்தான். சில சமயங்களில், `மெடிக்ளெய்ம்தான் வைத்திருக்கிறோமே’ என நாம் செய்யும் சில தவறுகள், நமக்குப் பிரச்னையை உருவாக்கிவிடும். அதில் முக்கியமானது `ரூம் ரென்ட்’ எனப்படும் மருத்துவமனை அறை வாடகை. இன்று கார்ப்பரேட் மருத்துவமனைகளில் ரூம் ரென்ட் என்பது யானை விலை, குதிரை விலை... சாதாரண பொது வார்டுக்கே 2,500 வாங்குகிறார்கள். அதுவே, தனி அறை என்றால், ஸ்டார் ஹோட்டல்களைவிடக் கட்டணம் அதிகமாக இருக்கும். பொது வார்டில் தொடங்கி,  இரண்டு மூன்று பேர் ஷேர்செய்யும் அறை, டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், சூட் என விதவிதமான அறைகளை வைத்திருக்கிறார்கள்.

`நாம் நிறையத் தொகைக்கு க்ளெய்ம் செய்திருக்கிறோமே... கூடுதலாக சில ஆயிரங்கள்தானே வித்தியாசம்?’ என்று டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் அறையைத் தேர்வுசெய்வோம். அதில்தான் தொடங்குகிறது வில்லங்கம்.பொதுவாக, ஒவ்வொரு மருத்துவக் காப்பீடு நிறுவனமும் பாலிசி தொகையில், ஒரு சதவிகிதம் அல்லது ஒன்றரை சதவிகிதம்தான் அறை வாடகைக்குச் செலவிடும். அதாவது, ஒரு லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுத்திருந்தால், ஒரு நாள் அறை வாடகை 1,000  ரூபாய் வரை மட்டும்தான் அனுமதிப்பார்கள். அதுவே, 10 லட்சம் ரூபாய் பாலிசி எடுத்திருந்தால், 10 ஆயிரம் ரூபாய் வரை அனுமதிப்பார்கள் என்றும் எண்ணக் கூடாது. இதற்கும் வரம்பு நிர்ணயித்து இருப்பார்கள்.

பாலிசி வாங்கும்போதே, `பாலிசி தொகையில் ஒரு சதவிகிதம், 5,000 ரூபாய்க்கு மிகாமல்...’ என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுவிடுவார்கள். அதாவது, அறை வாடகை 7,500 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். காப்பீட்டு நிறுவனம் அனுமதிக்கும் தொகை 5,000 ரூபாய் மட்டுமே. `இதனால் என்ன, கூடுதலாக 2,500 ரூபாய்தானே அதிகம்... பார்த்துக்கொள்ளலாம்’ என நினைப்பவர்கள் அதிகம்.

ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன், ஒரே நாளில் இரண்டு பேர் நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவருமே மெடிக்ளெய்ம் பாலிசி வைத்திருக்கின்றனர். முதலாவது நபர் இரண்டு லட்ச ரூபாய்க்குத்தான் பாலிசி வைத்திருக்கிறார். இரண்டாவது நபரோ ஐந்து லட்ச ரூபாய்க்கு பாலிசி வைத்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்