மண் வாசம் மாறாத தமிழச்சி!

விஞர், பேராசிரியை, பேச்சாளர், பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமைகொண்டவர் தமிழச்சி தங்கப்பாண்டியன். தலைநகரத்துக்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும் எழுத்திலும் பேச்சிலும் இன்னமும் மண் வாசம். “நம் பாரம்பரியமான ஊர்ப் பழக்க வழக்கங்களைத்தான் இன்னமும் நான் பின்பற்றுகிறேன். ஆரோக்கியம் என்பது அழகு நிலையங்களில் கிடையாது; அது நம் அஞ்சறைப் பெட்டியிலும், வீட்டுத் தோட்டத்திலும்தான் உள்ளது. அழகும் ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. நம் ஊருக்கு என ஒரு பாரம்பரிய உணவுமுறை உள்ளது. அதைத் தவிர்க்காமல் சாப்பிட்டாலே, அழகும் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

டயட் என்பது நல்ல உணவுகளைச் சாப்பிடுவதுதானே தவிர, சாப்பிடாமல் இருப்பது கிடையாது. நான் எந்த டயட்டீஷியன் உதவியையும் நாடுவது இல்லை. என் அம்மா, பாட்டி பின்பற்றி வந்த வழிமுறைகளைத்தான் பின்பற்றுகிறேன். ஹைபிரிட் காய்கறிகள், பழங்களை முற்றிலும் தவிர்த்துவிட்டு, நாட்டுக் காய்கறிகளை உட்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளேன். வேலையைப் பொறுத்து நான் தூங்கும் நேரம் மாறுபடும். தினமும் எட்டு மணி நேரம் தூங்குவேன். காலையில் எழுந்தவுடன் அரக்கப்பரக்க இல்லாமல், பூனைகள் சோம்பல் முறித்து எழுவதுபோல இயல்பாக என் நாளைத் தொடங்குவேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்