உடலினை உறுதிசெய் - 19

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மட்சியாசனா (Matsyasana)

ட்சியாசனா என்பது மீன்போன்ற நிலை. ஒரு மீன், குளத்தில் உள்ள அழுக்கை உண்டு நீரை சுத்தமாக்குவதுபோல, இந்த ஆசனம் ரத்த சுத்திகரிப்பைத் தூண்டுவதால், இதனை `மீன் நிலை’ (Fish pose) என்றும் அழைப்பர்.

கால்களை மடக்கி, பத்மாசன நிலையில் அமர்ந்து, கைகளைப் பக்கவாட்டில் ஊன்றி, மல்லாந்து படுக்க வேண்டும். ஐந்து விநாடிகளுக்குப் பிறகு, கைகளைப் பின்நோக்கிக் கொண்டுசென்று, காதின் அருகே நிலத்தில் பதித்து, மூச்சை இழுத்தபடி, மெள்ள மேல் உடலை உயர்த்த வேண்டும். உச்சி தரையில் பதிந்திருக்கட்டும். இப்போது, கைகளை முன் நோக்கிக் கொண்டுவந்து, கால் கட்டை விரலைப் பிடிக்க வேண்டும். பிறகு, ஒன்றன்பின் ஒன்றாக, மீண்டும் பழையநிலைக்கு வந்து, உடலைத் தளர்த்த வேண்டும். பிறகு, மெதுவாக எழுந்து அமர வேண்டும். கைகளால் ஒவ்வொரு காலையும் எடுத்துவைத்து ரிலாக்ஸ் செய்யலாம். 

கவனிக்க: தொடர்ந்து யோகா செய்பவர்களால்தான் இதைச் செய்ய முடியும். மற்றவர்கள் பயிற்சி இன்றி முயற்சிக்க வேண்டாம்.

கழுத்துவலி, வெர்டிகோ, தலைவலி, வலிப்பு நோய், இதயப் பிரச்னை உள்ளோர் இதைத் தவிர்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்