இனி எல்லாம் சுகமே - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செரிமானம் அறிவோம்!

நாம் சாப்பிடும்  உணவுகளைப் பிரித்து, செரிக்கும் முக்கியமான வேலையைச்செய்யும் சிறுகுடலில், ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் என்ன ஆகும்? குழாயைத் திறந்துவிட்டால் வேகமாக நீர் கொட்டுவதுபோல கடும் வயிற்றுப்போக்கு ஏற்படும். வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது என்றாலே சிறுகுடலில் ஏதோ பிரச்னை எனஅறிந்துகொள்ளலாம்.  ஃபுட் பாய்சன் ஏற்பட்டால், சிறுகுடல் உடனடியாகப் பாதிக்கப்படும். பொதுவாக, சிறுகுடல் தற்காலிகமாக மட்டுமே பாதிக்கப்படும். இதனால், பெரிய அளவில் பிரச்னை இல்லை. ஆனால், ஒரு சிலருக்கு நீண்ட நாட்களுக்கு சிறுகுடல் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. பொதுவாக, எட்டு வழிகளில் சிறுகுடல் பாதிப்படைகிறது. அவற்றைப் பார்ப்போம்.

டிப்பு மடிப்பாக இருக்கும் சிறுகுடலில் மட்டும் கிட்டத்தட்ட ஏழு லிட்டர் அளவுக்குத் தண்ணீர் பயணித்துக்கொண்டே இருக்கிறது. சிறுகுடல் செயல்பட வேண்டும் என்றால் தண்ணீர் அவசியம். நம் உடலின் பெரும்பகுதி தண்ணீர் இங்குதான் இருக்கிறது. ‘விபரியோ காலரே’ என்ற கிருமி சிறுகுடலைத் தாக்கும் போது, சிறுகுடலில் நீரோட்டம் தடைப்படும். இதனால், கடும்வயிற்றுப்போக்கு ஏற்படும். உடலில் நீர் இழப்பு ஏற்படும். சிறுகுடலில் இருக்கும் நீர் எல்லாம் வயிற்றுப்போக்குக் காரணமாக வெளியேறிக்கொண்டே இருக்கும். அதிக நீர் இழப்பால் கண்கள் பாதித்து, தோல் சுருங்கி, பின் இதயம், சிறுநீரகச் செயல்பாடும் குறைந்து, உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.

கி
ராமங்களில் இருக்கும் சுத்தமற்ற கிணறு, சிறுநீர், மலம் போன்றவை கலந்த ஏரி, குளம், ஆற்று நீரில் `ஜார்டியா’ எனும் பூச்சி இருக்கும்.  இது, ஒரு செல் உயிரி வகையைச் சேர்ந்தது. இது, நீர் மூலம் நமது உடலுக்குள் சென்றால், வயிற்று உப்புசம், வயிற்றுவலி, நுரைத்து மலம் வெளியேறுதல், உணவில் இருந்து சத்துக்களை முழுமையாகக் கிரகிக்க முடியாத நிலை போன்றவை ஏற்படும். எனவே, முடிந்தவரை நீரை நன்கு காய்ச்சி, வடிகட்டி அருந்த வேண்டும்.

ற்போது, பலர் பலவிதமான நோய்களுக்கு மாத்திரை சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மூட்டுவலி உள்ளிட்ட சில பிரச்னைகளுக்கான மாத்திரை எடுக்கும்போது, இரைப்பையில் புண்கள் ஏற்படுவதுபோலவே சிறுகுடலிலும் புண்கள் ஏற்படும். இதனால், சிறுகுடலின் பணிகள் மெள்ள மெள்ள பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

காசநோயைப் பொறுத்தவரையில், உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரும். சிறுகுடலில் டி.பி வந்தால் வயிற்றுவலி, வாந்தி, பேதி போன்றவை ஏற்படும். சிறுகுடல் டி.பி ஏற்படுவது சற்று அரிது என்பதால், கவலைப்பட வேண்டாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்