மருந்தில்லா மருத்துவம் - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
முதுகு வலி

முதுகு வலி பல காரணங்களால் தோன்றும். அதே போல், அறிகுறிகளும் வெவ்வேறு விதமாக இருக்கும். வெறும் அறிகுறிக்கு சிகிச்சை எடுப்பதைத்தான் இன்று பலரும் செய்கின்றனர். மூலக் காரணத்தைக் கண்டறிவதும் இல்லை, சிகிச்சை பெறுவதும் இல்லை.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் 35 வயதுப் பெண்மணி, முதுகுவலி என்று என்னிடம் வந்தார். வேலை செய்ய முடியாத அளவுக்கு, உட்காரவே முடியாதபடி, தாங்க முடியாத வலி. பல சிகிச்சைகள் எடுத்தும், பலன் இல்லை. திடீரென்று சில ஆண்டுகளாக வலி என்றார். எப்படி வந்தது என்றால் தெரியவில்லை. அவர் வாழ்வில் நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும் நினைவுபடுத்தச் சொன்னேன். “ஐந்து வருடங்களுக்கு முன், சிசேரியன் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.  ஆனால், அதனால் எந்தப் பிரச்னையும் இல்லை டாக்டர். அதன் பிறகு நன்றாகவே இருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் முதுகுவலி பிரச்னை ஆரம்பித்தது” என்றார். முதலில் இது சாதாரண வலி என்று அசட்டையாக இருந்துவிட்டார். வலி தீவிரமாகவே, மருத்துவரை அணுகி எம்.ஆர்.ஐ உட்பட பல பரிசோதனைகளை செய்து, மருந்தும் சாப்பிட்டிருக்கிறார். வலி குறையவில்லை.  நாளடைவில் படுக்கையிலேயே ஓய்வு எடுத்துக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், குடும்பத்தையும் கவனிக்க முடியவில்லை, வேலைக்கும் செல்ல முடியாத நிலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்