இறைவியே நலமா?

இல்லத்தரசிகள் ஹெல்த் கைடுடயட் உடற்பயிற்சி ஓய்வு

ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் உலாவும் பிரபல வீடியோ ஒன்று... ஒருவரிடம், “உங்கள் மனைவி என்ன செய்கிறார்?” என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், “வீட்டில் சும்மாதான் இருக்கிறார்” என்பார். “சமையல் யார் செய்வார்கள்?”, “துணி யார் துவைப்பார்? “வீட்டை யார் சுத்தம் செய்வார்?”, “குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது?” எனும் ஒவ்வொரு கேள்விக்கும் “மனைவி சும்மாதான் இருக்கிறார். அதனால், அவர்தான் செய்கிறார்” என்று பதில் சொல்கிறார் கணவர். இப்படி, வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்பவர்களாக இல்லத்தரசிகள் இருந்தாலும், அவர்களை வேலையற்றவர்கள் என்றுதான் சொல்கிறது நம் சமூகம்.

தன் கணவன், தன் குழந்தை, தன் வீடு என்று தன் வாழ்வில் எல்லாவற்றையும் குடும்பத்தினரின் நலனுக்காகத் தியாகம் செய்பவள் பெண். காலையில் எழுவது முதல், இரவு தூங்கச் செல்வது வரை தன் குடும்பத்தினர் நலன் ஒன்றுக்காகவே தீவிரமாக உழைப்பவள். குடும்பத்தில் யாருக்காவது ஒருவருக்கு உடல்நலக் குறைவு என்றாலும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, பிரத்யேக உணவு தயாரித்துக்கொடுப்பது, மருந்து மாத்திரைகள் தருவது என்று அவர்கள் குணம் பெற ஓயாது கவனம் செலுத்தும் குடும்பத்தலைவிகள், தங்கள் உடல்நலத்தைப் பராமரிக்கிறார்களா என்றால், இல்லை. உடல்நிலை சரி இல்லாவிட்டால்கூட ஏதேனும் ஒரு மாத்திரையை விழுங்கிவிட்டு, சிலர் அதைக்கூட செய்யாமல் வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள். இப்படி, இல்லத்தரசிகள் செய்யும் தவறுகளையும் செய்ய வேண்டியவற்றையும் பட்டியலிடுகிறார் மருத்துவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்