அழகைக் கூட்டும் ஹெல்த்தி உணவுகள்

வைட்டமின் ஏ

மஞ்சள், ஆரஞ்சு நிறப் பழங்கள், காய்கறிகளில் வைட்டமின் ஏ நிறைவாக உள்ளது. தினசரி உணவில், கேரட் மற்றும் பால் பொருட்களை சேர்ப்பதன் மூலம் போதுமான அளவு வைட்டமின் ஏ பெறலாம். தோலின் ஆரோக்கியத்துக்கு இந்த வைட்டமின் அவசியம்.

லைக்கோபீன்

தக்காளி, தர்பூசணி, கொய்யா போன்றவற்றில் லைக்கோபீன் அதிகம் கிடைக்கிறது. இந்தச் சத்து வயதான தோற்றம் ஏற்படுவதைத் தாமதப்படுத்தும்.

வைட்டமின் சி

தோலில் ஏற்படும் சுருக்கங்களை அகற்ற வைட்டமின் சி சத்து அவசியம். எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

வைட்டமின் இ

செல்கள் சேதமடைவதைத் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் வைட்டமின் இ. நட்ஸ், விதைகள் போன்றவற்றில் வைட்டமின் இ நிறைந்துள்ளது.

நார்ச்சத்து

உடலைச் சுத்தப்படுத்த நார்ச்சத்து உணவுகள் அவசியம். கீரைகள், காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இது, சிறுகுடலைச் சுத்தப்படுத்தி, கழிவுகளை அகற்றுகிறது. இதனால் உடல் பொலிவடையும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பேக்கரியில் விற்கப்படும் இனிப்பு வகைகள்.

செயற்கைக் குளிர்பானங்கள்.

டிரான்ஸ்ஃபேட் நிறைந்த நொறுக்குத்தீனிகள்.

உப்புச்சத்து நிறைந்த உணவுகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்