உடலினை உறுதிசெய் - 20

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பாத கோணாசனா

கால்களை மடக்கி, கைகளால் பாதங்களைக் கோத்துச்செய்யும் ஆசனம் என்பதால், பாத கோணாசனா என்று பெயர். தரையில், கால்களை அகட்டி அமர்ந்து, பாதங்களின் அடிப்புறம் ஒன்றில் ஒன்று படுமாறுவைக்க வேண்டும். இரு கைகளையும் கோத்து, கால் விரல்களைப் பிடித்துக்கொள்ள வேண்டும். முதுகுத்தண்டை நேராகவைத்து, மெதுவாக மூச்சை இழுத்துக்கொண்டே முன் பக்கம் குனிய வேண்டும். நெற்றி, தரையில் பதியும் வரை குனிய முயற்சிசெய்யவும். சில விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு, மூச்சை வெளியே விட வேண்டும். பின்னர், மூச்சை இழுத்தபடி, நிமிர்ந்து அமர்ந்த பின் மூச்சை விட வேண்டும். இப்படி, மூன்று முறை செய்ய வேண்டும்.

கவனிக்க: கர்ப்பிணிகள், முதல் ஐந்து மாதங்கள் வரை செய்யக் கூடாது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு மருத்துவர் அனுமதித்தால், மெதுவாகச் செய்யலாம். தீவிர மூட்டுவலி, இதயப்பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் இருப்போர் தவிர்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்