கன்சல்ட்டிங் ரூம்

கு.சண்முகநாதன், மேட்டுப்பாளையம்.

“என் வயது 28. நான் கடந்த 10 வருடங்களாகத் தச்சுத்தொழில் செய்துவருகிறேன். கடந்த ஒரு மாத காலமாக என் முழங்கைப் பகுதியில் வலி ஏற்படுகிறது. வலி மாத்திரைகள் எடுத்துக்கொண்டால், சிறிது நேரம் நன்றாக இருக்கிறது. பிறகு, மீண்டும் வலிக்கிறது. எதனால் இப்படி வலி ஏற்படுகிறது? இதற்குத் தீர்வு என்ன?”

டாக்டர் ஜி.மயில்வாகனன், எலும்பு, மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர், சேலம்.


“உங்களுக்கு ஏற்பட்டிருப்பதை ‘டென்னிஸ் எல்போ’ (Tennis elbow) பிரச்னை என்பார்கள்.   கையை அதிகம் பயன்படுத்தும் டென்னிஸ், பாட்மிண்டன் விளையாட்டு வீரர்களுக்கும், தச்சர்கள், பிளம்பர்கள், பெயின்டர்கள் மற்றும் கனமான பொருட்களைத் தூக்கும், நகர்த்தும் பணியில் இருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை அதிகமாக ஏற்படுகிறது. டாக்டர்கள் இதை, லேட்டரல் எபிகண்டிலிடிஸ் (Lateral epicondylitis)  என்பார்கள். போதுமான ஓய்வும் ஸ்ட்ரெச்சிங் போன்ற தசையை நெகிழ்த்தும் பயிற்சிகளும் இன்றி, தொடர்ந்து கைகளுக்கு வேலை தருவதால், முழங்கைப் பகுதியில் உள்ள தசைகள் பாதிப்படைகின்றன. சிலருக்கு, இந்த வலி முழங்கையில் இருந்து மணிக்கட்டு வரை பரவும். வலி மாத்திரைகளால் தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். நிரந்தரத் தீர்வு கிடைக்காது. எலும்பு, மூட்டு நிபுணரை அணுகி, பரிசோதனைகள் செய்து, டென்னிஸ் எல்போ பிரச்னைதானா என்று உறுதிப்படுத்த வேண்டும். டென்னிஸ் எல்போ பிரச்னை ஆரம்ப நிலையில் இருந்தால், மாத்திரை, மருந்துகள், பிசியோதெரப்பி, போதுமான ஓய்வு போன்றவற்றின் மூலமே குணப்படுத்திவிட முடியும். தீவிரமான பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அறுவைசிகிச்சை தேவைப்படலாம். எனவே, தாமதிக்காமல் உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.”

ஆர்.சூடாமணி, மேட்டூர்.

“என் வயது 30. திடீரென கடந்த சில நாட்களாக  நாக்கு வீங்கி உள்ளதைப் போல உணர்கிறேன். மூச்சுவிட சற்று சிரமமாக, அசெளகர்யமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பும் இதே போல ஏற்பட்டது. பிறகு, அது தானாகவே சரியாகிவிட்டது. எதனால் இப்படி ஏற்படுகிறது?”


டாக்டர் வி.ஜெயபால், பொது அறுவைசிகிச்சை நிபுணர், திருச்சி.


“நாக்கு வீங்குவதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. சிலர், காலை பல் துலக்கிய பின், நாக்கை வழிக்கும்போது நகங்களால் அழுத்தமாகப் பிராண்டிக் கொள்வார்கள். இதனால், எடீமா (Edema) எனும்  உட்புறத் திரவம் கசியும் பிரச்னை ஏற்பட்டு, நாக்கு வீங்கக்கூடும். முதல் நாள் இரவு உண்ட சோம்பு, சீரகம் போன்ற மசாலா பொருட்கள், மது, புதிய மருந்துகளை எடுத்துக்கொள்வது போன்ற காரணங்களாலும் நாக்கு வீக்கம் ஏற்படும்.  சிலருக்கு, உயர் ரத்த அழுத்தம், இதய செயல்இழப்பு போன்ற தீவிர பிரச்னைகளுக்குத் தரப்படும் ஏஸ் இன்ஹிபிட்டர் (Ace inhibitor) எனப்படும் லிஸினோபிரில் (Lisinopril) போன்றவற்றை எடுத்துக்கொள்வதாலும் நாக்கு வீக்கம் ஏற்படக்கூடும். ஏதாவது உணவால் ஒவ்வாமை பிரச்னை இருந்தாலும் நாக்கு வீக்கம் ஏற்படும். மிக அரிதாக, வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக குளோசிடிஸ்  (Glossitis) எனும் நாக்கு வீக்கப் பிரச்னை ஏற்படும். ஆனால், இது ஒரே நாளில் திடீரென ஏற்படும் பிரச்னை அல்ல. எனவே, ஒரு பொது மருத்துவரை உடனடியாக அணுகி, மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. பொதுவாக, எதனால் இந்தப் பிரச்னை வருகிறது எனக் கண்டறிந்தால், சில எளிய மாத்திரை, மருந்துகளாலேயே இதை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.”

சி.ஜென்சி, புதுக்கோட்டை.


“என் வயது 26. கடந்த ஒரு மாத காலமாக, தினமும் காலையில் எழுந்ததும் சுமார் 15 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை தலைவலி ஏற்படுகிறது. இடது புருவத்துக்கு மேற்புறம் முதல் இடது தாடைக்கு உட்புறம் பின்னந்தலை வரை வலி இருக்கிறது. எதனால், இப்படி ஏற்படுகிறது? இதற்குத் தீர்வு என்ன?”

டாக்டர் சி.கருணாகரன், பொதுமருத்துவர், பெரம்பலூர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்