மனமே நீ மாறிவிடு - 15

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மாவு அரைக்கப் போன பையன் திருடன் போல மெள்ளப் பதுங்கியபடி அடி எடுத்து  நடந்துகொண்டிருந்தான். வழி மறித்த பெரியவர் காரணம் கேட்க, “அம்மா, மாவை நைஸா அரைச்சிட்டு வரச்சொன்னாங்க... அதான்” என்றானாம்.

இதைப் படித்துவிட்டு மொக்கை ஜோக் என்கிறீர்களா அல்லது ஒரு விநாடி உங்களை மறந்து சிரிக்கிறீர்களா? எதுவாகினும், அது உங்கள் மனவளத்தைப் பிரதிபலிக்கிறது என்பதுதான் உண்மை.

நகைச்சுவை உணர்வு மிக நுட்பமானது. சிரிக்கத் தெரிந்தவர்கள் வாழத் தெரிந்தவர்கள். எவற்றையும் நகைச்சுவையாகப் பார்க்கும்தன்மை வாழ்வின் அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் அளிக்கக்கூடியது. நகைச்சுவையால், மனமும் உடலும் இலகுவாகின்றன.  நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் மனநலத்தைப் பேணுவது எளிது. மனஉளைச்சலை சமாளிப்பது எளிது. துயரங்களில் இருந்து மீள்வது எளிது.

காரணமே இல்லாமல் சிரிப்பவர்களை என்ன சொல்ல? அவர்கள் காரணம் நமக்குப் புரியவில்லை என்பதுதான் உண்மை. “இதில் சிரிக்க என்ன இருக்கு?” என்று யாராவது சொன்னால், அவர்கள் மனம் அங்கு இறுகிப்போயிருக்கிறது என்றுதான் பொருள். சிரிப்பவர்கள் பிறரைச் சிரிக்கவைக்கத் தெரிந்தவர்கள். பிறரை மகிழ்விப்பதைவிட மிகப்பெரும் மனித சேவை எது?

நண்பர் ஒரு பெரும் வாழ்க்கைத் துயரை விவரித்துக்கொண்டிருந்தார். திடீரென டி.வியில் ‘மைக்கேல் மதன காம ராஜன்’ படம் வந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதிர அதிர சிரிக்க ஆரம்பித்தார். நானும் அவரும் இந்தப் படத்தை ஆறு முறையாவது பார்த்திருப்போம். முதல் முறை பார்ப்பது போல ரசித்துப் பார்த்தோம். காட்சிகள் முடிந்தும் (ஆனந்தக்) கண்ணீரை துடைத்துக்கொண்டு “எங்கிருந்து எங்கே வந்திட்டோம் பாருங்க” என்றார் சிரித்தவாறு.

பிறரைப் பார்த்துச் சிரிப்பதைவிட தன்னைப் பார்த்துச் சிரிப்பது மிகப்பெரிய ஆளுமைகளுக்கே சாத்தியம். உலகின் அனைத்து சிறந்த நகைச்சுவையாளர்களும் தன்னையே கிண்டலடித்துக்கொள்பவர்கள்தான். தன் தவறை ஏற்று, அதை எந்தத் தற்காப்பு உணர்வும் இன்றி ரசமாகப் பகிர்ந்துகொள்ளும் மனிதர்களை யாருக்குத்தான் பிடிக்காது? இதை, திரையில் மட்டும் அல்ல. நிஜ வாழ்க்கையிலும் பார்க்கிறோம். சிலரை எல்லோருக்கும் பிடிக்கிறது என்றால் அதற்கு அவர்களின் நகைச்சுவை உணர்வுதான் முக்கியக் காரணமாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்