இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ருத்துவக் கட்டணம் ராக்கெட் போல உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்த அதிகப்படியான செலவில் இருந்து நம்மைக் காப்பது மெடிக்ளெய்ம். இதுபற்றிய விழிப்புஉணர்வு இப்போதுதான் பரவிவருகிறது.

எல்லோருக்கும் எல்லா காப்பீடுகளும் பொருந்தாது என்பதால், வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ற வகையில் பிரத்யேக பாலிசிகளை மெடிக்ளெய்ம் நிறுவனங்கள் அளிக்கின்றன. இளம் வயதில் காப்பீடு எடுத்தால், ப்ரீமியம் குறைவு. அதுவே, வயது அதிகரித்தால், உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், ப்ரீமியம் அதிகம். மாரடைப்பு, வலிப்பு நோய் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு மெடிக்ளெய்ம் பாலிசி அளிக்க நிறுவனங்கள் மறுப்பதும் உண்டு. ஆனால், அவர்களுக்கும் மருத்துவக் காப்பீடு கிடைக்க, சில பாலிசிகளை காப்பீட்டு நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன. அதனால்தான், முதியவர்களுக்கு, புற்றுநோய் பாதுகாப்பு, சர்க்கரை நோய் பாதுகாப்பு, கிரிட்டிக்கல் இல்னெஸ் என்று விதவிதமாக பாலிசிகள் கிடைக்கின்றன. இந்த இதழில் மாரடைப்பு வந்தவர்களுக்கு உள்ள சிக்கல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

பொதுவாக, ஆரோக்கியமான நபர் மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்கிறார் என்றால், அவருக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்க்கான கவரேஜ் கிடைத்துவிடும். கிரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசி எடுப்பவர்களுக்கும் முதன்முறையாக மாரடைப்பு வந்தால், கவரேஜ் கிடைத்துவிடும். ஆனால், ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்களுக்கு பாலிசி தர மறுத்துவிடுகின்றன மெடிக்ளெய்ம் நிறுவனங்கள். இதனால், எந்த மருத்துவக் காப்பீடும் இன்றி அவதியுறுகின்றனர் இதய நோயாளிகள்.

இந்தியாவில் இதய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவர்களுக்கு ஏற்ற வகையில் பிரத்யேக பாலிசிகளை சில காப்பீட்டு நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன. இவர்கள், வெறும் இதய நோய்க்கான கவரேஜ் மட்டும் அளிப்பது இல்லை. வேறு வகையான நோய் பாதிப்பு, விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் க்ளெய்ம் அளிக்கின்றனர். பொதுவான மருத்துவக் காப்பீடு போலவே, இந்த பாலிசியிலும் ஏற்கெனவே உள்ள நோய்களுக்குக் காத்திருப்பு காலமும் உண்டு.

இதய நோய்க்கு என்று ஐ.சி.ஐ.சிஐ லும்பார்டு மற்றும் ஸ்டார் ஹெல்த் நிறுவனம் பிரத்யேக பாலிசிகளை அளிக்கின்றன

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்