இனி எல்லாம் சுகமே - 15

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செரிமானம் அறிவோம்!

‘சாது மிரண்டால் காடுகொள்ளாது’ என்பது, எதற்குப் பொருந்துமோ இல்லையோ கணையத்துக்குப் பொருந்தும். செரிமான மண்டலத்தின் இதயம் என்றுகூட இதனைச் சொல்லலாம். எந்தவோர் உணவாக இருந்தாலும், அது என்ன வகை என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்ப என்சைம்களை உற்பத்திசெய்து, செரிமானத்துக்கு உதவுவது, கணையத்தின் முக்கியப் பங்கு.

கணையத்துக்கு, தமிழ்ப் பேரகராதியில் என்ன பொருள் தெரியுமா? வளைந்த தடி. மேற்கத்திய இலக்கியங்களில் இதனை ‘மீன்’ என்றும் சொல்கிறார்கள். வளைந்த தடி போலவும் மீன் போலவும் இருக்கும் கணையம், பஞ்சு போன்று மென்மையானது. இதனை மருத்துவர்கள் எளிதில் தொட்டுப்பார்க்க முடியாது. முதுகுத்தண்டுக்கு அருகில், இரைப்பைக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது கணையம்.  இதன் தலைப் பகுதி, இரைப்பையில் இருந்து உணவு டியோடினத்துக்குச் செல்லும் பகுதியில் அமைந்திருக்கிறது. சுமார்  18 - 25  செ.மீ அளவுக்கு நீளமாக இது படுத்திருக்கிறது. இது அமைதியாக இருந்தாலும், செரிமான மண்டலத்தில் உணவு ஜீரணம் ஆக அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் நம்பர் ஒன் உறுப்பாக இருக்கிறது. கணையம் மட்டும் ஒழுங்காகச் செயல்படவில்லை எனில், எந்த உணவையும் செரிக்க முடியாது.

ஆரோக்கியமான கணையம், ஒரு நாளைக்கு சுமார் ஒரு லிட்டர் கணைய சுரப்பை (ஜூஸ்) உற்பத்தி செய்கிறது. கணையம், வெறும் என்சைம்களைச் சுரப்பதோடு மட்டும் நின்றுவிடுவது இல்லை. இயற்கையாகவே மிகச்சிறந்த  சென்சார் வேலையையும் செய்கிறது.

ஆட்டோமேட்டிக் சிஸ்டம் போல இயங்குகிறது. நாம் சாப்பிடும் உணவைப் பொருத்து ஜூஸை உற்பத்திசெய்யும். அது மட்டும் இல்லாமல்,  எவ்வளவு உணவு வருகிறதோ அதற்கு ஏற்ப என்சைமை உற்பத்திசெய்யும். உணவு எப்போது இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்கு வருகிறதோ, அந்தச் சமயம் சரியாகக் கணைய சுரப்பும் வந்துவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்