ஸ்டார் ஃபிட்னெஸ்

பிரபலமானது மாடலாக, 2007-ம் ஆண்டில் மிஸ்டர் குஜராத். பிறகு, கரன் ஜோஹரிடம் உதவி இயக்குநர். தொடர்ந்து, ‘ஸ்டூடன்ட் ஆஃப் த இயர்’ படத்தின் நாயகன். பாலிவுட்டின் ட்ரீம் பாய் சித்தார்த் மல்ஹோத்ராவின் இந்தப் பயணம் ஒரு ரோலர் கோஸ்டர் ரைடுதான். இவரை, ஆணழகன் போட்டி, மாடலிங், சினிமா என எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றது ஒரே ஒரு விஷயம்தான்... ஃபிட்டான உடல்.

சித்தார்த்துக்கு வொர்க்அவுட் என்பது பால்யகால நண்பன். இளம் வயதில் இருந்தே ஜிம்மே கதி எனக் கிடப்பது இவரது ஹாபி. “உடற்பயிற்சியைப் பழக்கமாக்கிக்கொண்டால், அது இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது. முடிந்த வரை இளம் வயதிலேயே ஜிம்முக்குப் போவதைப் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்” என்பது சித்தார்த்தின் சின்சியர் அட்வைஸ்.

சிக்ஸ் பேக் வைப்பது சாதனை அல்ல. அதைப் பராமரிப்பதுதான் பெரிய விஷயம். சித்தார்த்துக்கு ஆண்டு முழுதுமே சிக்ஸ் பேக் சீஸன்தான். அதனால், ஜிம்மைத் தாண்டியும் இவரது வொர்க்அவுட் இருக்க வேண்டி உள்ளது.இதற்கு சித்தார்த்தின் தேர்வு, கால்பந்து. “எல்லோருக்குமே உடல் உழைப்புத் தேவைப்படும் ஒரு விளையாட்டு அவசியம்” என்கிறார்.

சதீஷ் நர்கார் என்பவர்தான் சித்தார்த்தின் ஜிம் பயிற்சியாளர். மாதத்துக்கு ஒரு முறை வொர்க்அவுட்களை மாற்றுவது, வேலை நேரத்துக்கு ஏற்ப வொர்க்அவுட்டைப் பட்டியலிட்டுத் தருவது என, எல்லாவற்றையும் இவர்தான் கவனிக்கிறார். இவர் குதிக்கச் சொன்னால், மலை மேல் இருந்துகூட குதிப்பார் சித்தார்த். அது ஒரு வொர்க்அவுட்டாக இருக்கும் என நினைக்கும் அளவுக்கு சதீஷ் மீது நம்பிக்கை.

சாப்பாடு என்றால் சித்தார்த்துக்குப் பிரியம். “பீட்ஸாவைக் கண்ட சித்தார்த்தைப் போல” என உவமையே எழுதலாம். ஆனால், உட்கொள்ளும் கலோரிகளைக் கவனத்தில்வைத்து ஜிம்மில் சரிக்கட்டிவிடுவார். “வாடா... வாடா என் ஏரியாவுக்கு வாடா” எனக் கொழுப்பை ஜிம்முக்கு அழைத்துச் சாத்துவது சித்தார்த் ஸ்டைல்.

“எப்போதும் ஆக்டிவாக இருக்கும் புரொஃபஷனில் இருப்பவர்களுக்குதான் உடற்பயிற்சி அவசியம் என நினைப்பது தவறு. சும்மாவே அமர்ந்திருக்கும் வேலைகளில் இருப்பவர்களுக்குத்தான் உடற்பயிற்சி மிகவும் அவசியம்... எல்லோருக்குமே சிக்ஸ் பேக் தேவை இல்லைதான். ஆனால் வொர்க்அவுட் மிக அவசியம்” என்கிறார் சித்தார்த்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்