சிறிய விஷயங்களின் அற்புதம்!

ம் அன்றாட வாழ்வில்​,​ சிறு சிறு விஷயங்களே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். சிறிய அளவில் நாம் உணவில் சேர்ப்பதால் பெரிய பலன்களைத் தரும் உணவுகள் பற்றிப் பார்போம்.

கறிவேப்பிலை: ​சர்க்கரை நோய்​ உள்ளவர்கள், சாப்பிட்டுவருவது நல்லது. இரும்புச்சத்துக் குறைபாடு, பார்வைக் குறைபாடு, முடி உதிர்தல் ஆகியவற்றைத் தீர்க்கும்.

கொத்தமல்லி: ​செரிமானத்தை அதிகரிக்கும்.​ கல்லீரலைச் சுத்தப்படுத்தும். இது, ஒரு டீடாக்ஸ் கீரை எனலாம்.​

இஞ்சி: பித்தக்குறைபாடு, சளி மற்றும் காய்ச்சலுக்கு உகந்தது. வயிற்று உபாதைகளைத் தீர்க்கும்.

பூண்டு: ​கெட்ட ​கொழுப்பைக் குறைக்கும். வா​யுத்​ தொல்லைகள்​ உருவாகாமல் தடுக்கும். அன்றாடம் அளவுடன் சாப்பிட்டுவர புற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்