உயிர் காக்கும் உறுப்பு தானம்

உடல் உறுப்பு தான தினம் - ஆகஸ்ட் 13

டல் உறுப்பு தானம் செய்வதில், இந்தியாவைப் பொருத் தவரை தமிழகம்தான் முன்னிலையில் உள்ளது. ஆனால், நம் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் பேர் உடல் உறுப்புக்கள் கிடைக்காமல் மரணத்தைத் தழுவுகின்றனர். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புஉணர்வு என்பது நெடிய பயணம். அதில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். ஒருவர், தன் உடல் உறுப்புகளைத் தானம் செய்யும்போது, அதனால் சுமார் எட்டு  பேர் வாழ்க்கை பெறுகிறார்கள். எனவே, உடல் உறுப்பு தானத்தின் அவசியம் குறித்த விழிப்புஉணர்வைப் பரவலாக்க வேண்டியது நம் கடமை.

இறந்த பின்னும் நம்மை வாழவைக்கும் அற்புதம் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள். உடல் உறுப்பு தானம் குறித்த, பல தவறான நம்பிக்கைகள் உள்ளன. எது சரி, எது தவறு என்பதைப் பார்ப்போம்.

மித் 1

மனிதர்கள் தங்களது உடல் உறுப்புகளை விற்கலாம், வாங்கலாம்?

உண்மை: வணிக நோக்கில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்வது, தண்டனைக்குரிய குற்றம். உடல் உறுப்புக்கு பேரம் பேசினால், அது மிகப்பெரிய குற்றம். உடல் உறுப்பு தானம் செய்வதாக முடிவு எடுத்தால், அந்த உடல் உறுப்புகள் யார் யாருக்குப் பொருத்தப்படும் என்பதை, அரசின் உடல் உறுப்பு தான மையமே முடிவுசெய்கிறது. அரசு மருத்துவமனையில் உடல் உறுப்புகளைத் தானம் செய்தால், அரசு மருத்துவமனைகளில் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். எனவே, அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்