காலனாகும் கறுப்புக் காய்ச்சல்

றுப்புக் காய்ச்சல் எனப்படும் காலா அஸார் (Kala-azar) மலேரியாவுக்கு அடுத்த படியாக உலகையே அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று. ஆண்டுதோறும், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.  இந்தியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இதன் தாக்கம் அதிகம். இந்தியாவில் குறிப்பாக, பீகாரில் இதன் பாதிப்பு மிக அதிகம். ஆனால், கறுப்புக் காய்ச்சல் பற்றிய விழிப்புஉணர்வு நம் மக்களிடையே மிகக் குறைவாகவே இருக்கிறது.

கறுப்புக் காய்ச்சல்


நோய் முற்றிய நிலையில் உடலின் நிறம் கறுத்துவிடுவதால், இதற்குக் கறுப்புக் காய்ச்சல் என்று பெயர். இது, சுகாதாரமற்ற இடங்களில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் மிக அதிகமாகப் பரவும் ஒரு உயிர்கொல்லிக் நோய் இது.  பிலிபோட மோமஸ் அர்ஜென்டிப்ஸ் எனப்படும் பெண் மணல் பூச்சி கடிப்பதால், லீஸ்மானியா டோனவனி எனும் நுண்ணுயிர்க் கிருமி உடலில் செலுத்தப்பட்டு இது பரவுகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவரை மணற்பூச்சி கடித்துவிட்டு, ஆரோக்கிய மானவரைக் கடிக்கும்போது இந்த நோய் எளிதாகப் பரவுகிறது. நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிய, இந்தக் கிருமிகள் மனித உடலில் உட்புகுந்த நாளில் இருந்து, 10 நாட்கள் முதல் இரண்டு ஆண்டுகள்கூட ஆகலாம்.எப்படிப் பரவுகிறது?

மணல் பூச்சி மனிதனைக் கடிப்பதன் மூலம் மனித உடலுக்கு லார்வா நிலையில் உள்ள  ஒட்டுயிர் தொற்றுகிறது.ரத்தத்தை உறிஞ்சுவதற்காக பூச்சி ஒரு மனிதனைக் கடிக்கும் போது அந்த மனிதனுக்குத் தொற்று ஏற்பட்டிருந்தால், அவர் உடலில் இருந்து காலா அசார் ஒட்டுண்ணிகளும் உறிஞ்சி எடுக்கப்படுகின்றன.ஒட்டுண்ணிகள், பூச்சியின் உடலில் வளர்ச்சி அடைந்து பல மடங்கு பெருகுகின்றன. ஆறு முதல் 10 நாட்களுக்குப் பின் முழு வளர்ச்சிஅடைந்து, மற்றொரு மனிதனின் உடலில் செலுத்தப்படத் தயாராகின்றன.

பாதிப்புகள்

இது, மனிதனின் எலும்பு மஜ்ஜை, மண்ணீரல், கல்லீரல் மற்றும் எண்டோதீலியல் தசைகளில் தங்கி, மெள்ள அவற்றைப் பாதிக்கின்றன. தொடர்ந்து கவனிக்காமல் விடும்போது, ஒரு கட்டத்தில் கடுமையான காய்ச்சல் மற்றும் வயிறு வீக்கம் போன்றவை ஏற்பட்டு, உயிரிழப்புகூட ஏற்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்