ஜில்லுன்னு ஒரு தெரப்பி!

ஸ் என்றதுமே மனம் ஜில்லிடுகிறது. ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தி வலி நீக்க சிகிச்சை பெறலாம் என்பது  தெரியுமா? ஐஸ்கட்டி பல்வேறு பிரச்னைகளுக்கும் மிகச் சிறந்த தெரப்பியாக, நிவாரணியாகப் பயன்படுகிறது.

ஐஸ் பேக்கில், ஐஸ் கட்டிகளைப் போட்டு உடலின் எந்த இடத்தில் பிரச்னை இருக்கிறதோ, அங்கு ஒத்தடம் கொடுத்தால் போதும். “ஐஸால் கை, கால்கள் மரத்துப்போகும். ரத்தநாளங்கள் இறுகும்” என்ற பயம் சிலருக்கு இருக்கும். ஆனால், இரண்டு நிமிடங்கள் வரைதான் அசௌகர்யமாக இருக்கும். பிறகு, ரத்த நாளங்கள் நன்கு தூண்டப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகும். அனைவருக்கும் நல்ல பலன் அளிக்கக்கூடிய சிகிச்சை இது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் செய்யலாம்.

குழந்தைகள் பலருக்கும் சிறு வயதிலேயே உடல் பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கு ஐஸ் தெரப்பி பலன் தரும். குழந்தைகளுக்கு வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுச்செய்யும் சிகிச்சையும் உண்டு. இதுவும் நல்ல பலன் தரும்.

அதீதத் துறுதுறுப்புடன் இருக்கும் குழந்தை களுக்கு, முதுகுத்தண்டுவடத்தில் ஐஸ் மசாஜ் செய்யும்போது, நல்ல முன்னேற்றம் தெரியும். மருத்துவர் பரிந்துரைப்படி குறிப்பிட்ட காலத்துக்கு, இந்த சிகிச்சை செய்துகொள்ளலாம். இதனால், சளி பிடித்தால், சில நாட்கள் நிறுத்திவிட்டு, சிகிச்சையை மீண்டும் தொடரலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்