தைராய்டு பிரச்னையைத் தவிர்ப்போம்

சில பெண்கள் திருமணத்துக்கு முன்பு வரை ஒல்லி பெல்லியாக இருப்பார்கள். கல்யாணம் ஆனதும் குண்டாகிவிடுவார்கள். ‘சரி! கல்யாணப் பூரிப்பு, குண்டாகிட்டாங்க’ என்று நினைப்போம். சிலர் நாளுக்கு நாள் ஒல்லியாகிக்கொண்டே போவார்கள். ‘வொர்க் டென்ஷன்... அலைச்சல் அதான்...’ என அவர்களாகவே ஏதாவது ஒரு சமாதானம் சொல்லிக்கொள்வார்கள். உண்மையில் இப்படி காரணமற்ற உடல் எடை இழத்தல் அல்லது அதிகரித்தல் தைராய்டு பிரச்னையாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

தைராய்டு

நமது உடலில் ஏழு நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இதில், கழுத்தின் முன் பகுதியில், தொண்டைக்குப் பின்புறம் வண்ணத்துப்பூச்சியின் வடிவில் அமைந்திருப்பது தைராய்டு சுரப்பி. இந்த சுரப்பியில் இருந்து தைராக்சின் (Thyroxine), டிரையடோதைரோனின் (Triiodothyronine) என இரண்டு முக்கியமான சுரப்புகள் உற்பத்தியாகின்றன. இதில்,  தைராக்சினை, டி4 (T4) என்றும் டிரையடோதைரோனினை, டி3 (T3) என்றும் சொல்வார்கள். இந்த இரண்டு சுரப்புகளும் சுரக்க பிட்யூட்டரியில் இருந்து உருவாகும் டி.எஸ்.ஹெச்  (Thyroid stimulating hormone ) எனப்படும் ஹார்மோன் உதவுகிறது. நமது உடலில் வளர்சிதை மாற்றங்கள் சீராக நடைபெறவும் ஆரோக்கியமாக இருக்கவும் இந்த சுரப்புகள் மிகவும் முக்கியம். 

தைராய்டு பிரச்னை

பொதுவாக, தைராய்டு சுரப்பியில் வீக்கம் ஏற்படுதல், கட்டிகள் உருவாகுதல், சுரப்புகள் அதிகமாகவோ குறைவாகவோ சுரத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.  தைராய்டு சுரப்பி மிகக் குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்போ தைராய்டிஸம் என்றும் தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்பர் தைராய்டிஸம் என்றும் சொல்வோம்.

தைராய்டு பாதிப்பு யாருக்கு வரும் பொதுவாக, அனைவருக்குமே தைராய்டு பாதிப்பு ஏற்படும் என்றாலும் ஆட்டோ இம்யூன் எனப்படும் சுய நோய் எதிர்ப்பு சக்தி பிரச்னையால், பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.  கர்ப்பக் காலத்தில் தாய்க்கு  தைராய்டு குறைபாடு ஏற்பட்டால்,  கருவையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. கருவில் உள்ள குழந்தைக்கு, முதல் 12 வாரங்கள் வரை தைராய்டு சுரப்பி உருவாவது இல்லை. இதனால், தாய்க்கு ஏற்படும் தைராய்டு குறைபாடு குழந்தையின் மூளை வளர்ச்சியிலும்  பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, கருத்தரிப்பதற்கு முன்பே பெண்கள் தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. பிறந்த குழந்தைகளுக்கும் தைராய்டு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். திருமணமான இளம்பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு குறைபாட்டினால் கருவுறுதலில் சிக்கல் ஏற்படலாம். சிலருக்கு, கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும், சிலருக்கு உடலில் அயோடின் குறைபாடு அதிகமாக இருந்தாலும் தைராய்டு பாதிப்பு ஏற்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்