டூத் வொயிட்டனிங் 10 உண்மைகள்

`டூத் வொயிட்டனிங்’ என்பது பல்லின் வெளிப்புறத்தில் எனாமல் நிறத்தை மேம்படுத்தும் ‘ப்ளீச்சிங்’ சிகிச்சை. ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் கார்பமைடு பெராக்ஸைடு என்ற இரண்டு ரசாயனங்களைக்கொண்டு இந்த சிகிச்சை செய்யப்படுகிறது.

மருத்துவமனையில் செய்யப்படுவது மற்றும் வீட்டிலேயே செய்யப்படுவது என, இரண்டு முறைகளில் டூத் வொயிட்டனிங் செய்யப்படுகிறது. பல்லின் தரம், நிற மாற்றத்தின் காரணங்கள், சென்சிடிவிட்டியைப் பொறுத்து சிகிச்சை முடிவு செய்யப்படும்.

தண்ணீரில் ஃபுளோரைடு ரசாயனம் இருக்கிறது. இதுதான் பற்களின் நிற மாற்றத்துக்குக் காரணம். அதிக அளவில் ஃபுளோரைடு கலந்திருக்கும்போது, அது பற்களை உருவாக்கக்கூடிய ஹைட்ராக்சிஅப்படைட் மூலக்கூறுகளைப் பாதித்து, பற்களின் நிறத்தை மாற்றுகிறது.

வெளிர்நிறம் முதல் அடர் நிறம் வரை பற்களின் தன்மையைப் பொறுத்து நிறங்கள் மாற்றப்படும். என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும் என்பதை டாக்டர் முடிவு செய்வார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்