அந்தப்புரம் - 26

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: ஸ்யாம்குடும்பம்

மாலினி, மகேந்திரனின் காதல்... அதைத் தொடர்ந்து திருமண வாழ்க்கை என எல்லாமே நல்லபடியாகத்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால், குழந்தை பிறப்பது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. நாட்கள் ஆகஆக இருவருக்கும் வாழ்க்கையில் ஒருவித வெறுமை வளர்ந்தது. குழந்தை இல்லை என்கிற வெறுமை, காலப்போக்கில் வெறுப்பாக மாறியது. வெறுமை... வெறுப்பு.

வாழ்க்கை தொந்தரவு நிறைந்ததாக மாறியது. என்னதான் வெளியில் சந்தோஷமாகப் பேசிச் சிரித்தாலும் மனதுக்குள் சோகம் நிறைய இருந்தது. ஒருகட்டத்தில், குழந்தை இல்லை என்ற கவலையே இவர்களது வாழ்வின் மையப்புள்ளியாக மாறியது. மாலினிக்கும் மகேந்திரனுக்கும் மட்டும் அல்ல... இருவரது பெற்றோர்களின் வீட்டிலும் கவலையை ஏற்படுத்தியது. மாலினியின் அம்மா கோயில் கோயிலாகச் சென்று பூஜைசெய்தார். மகேந்திரனின் பெற்றோரோ, பிரபல ஜோதிடர்களை எல்லாம் சந்தித்து ஆலோசனை செய்தனர். அவர்கள் சொல்லும் பரிகாரப் பூஜைகளைத் தவறாமல் செய்துவந்தனர். ஆனால், மாலினி கருத்தரிக்கவே இல்லை.

ஊரின் பிரபல குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவமனையை அணுகிப் பரிசோதனைகள் செய்துகொண்டனர். மகேந்திரனுக்கு செமன் பரிசோதனையும் சில ஹார்மோன் பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்பட்டன. மாலினிக்கு, சில ஹார்மோன் பரிசோதனைகளும், கர்ப்பப்பை ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டன. மேலும், முட்டை வளர்ச்சி மற்றும் முட்டை வெளிப்படும் தினத்தை அறிய ஃபாலிக்கிள் ஸ்டடி செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் சாதகமாகவே இருந்தன. இருவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிந்தது. இதைத் தொடர்ந்து, இருவரிடமும் பேசினார் டாக்டர். ஃபாலிக்கிள் ஸ்டடி அடிப்படையில், கருத்தரிக்க ஏதுவான நாள் எது என்று டாக்டர் குறித்தார். மாதவிலக்கு வந்ததில் இருந்து குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளப் பரிந்துரைத்தார்.

புதிய பிரச்னை இவர்கள் வாழ்வில் முளைக்க ஆரம்பித்தது. இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப தன்னால் செயல்பட முடியாத நிலை இருப்பதை மகேந்திரன் உணர்ந்தான். அவனது இந்த இயலாமை, அவனுக்கு மிகப் பெரிய மனக் குழப்பத்தை ஏற்படுத்தியது. மாலினியின் எதிர்பார்ப்பை அவனால் பூர்த்திசெய்ய முடியவில்லை. இது அவர்கள் வாழ்வில் மேலும் பிரச்னையை அதிகரித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்